india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மோஹிதே, உலகின் 10 ஆவது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய  முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

                           ***************   

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                           ***************   

சென்னையில் தனியார் கொரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரி வித்துள்ளார். 

                           ***************   

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1499 கன அடியிலிருந்து 1,350 கன அடியாக குறைந்துள்ளது. 

                           ***************   

மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 21 முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.

                           ***************   

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி உள்பட மும்பையின் பைகுல்லா சிறையில் உள்ள 38 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

                           ***************   

முழு பொது முடக்கத் தினமான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏற்கனவே முன்பதிவுசெய்திருக்கும் திருமணங்களை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

                           ***************

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.

                           ***************

தில்லியில் மருத்துவ நோக்கங்களுக்காக ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது.

                           ***************

கர்நாடகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்வதாகவும், மே மாதம் 1-ந் தேதி முதல் கோடைவிடுமுறை தொடங்க உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள் ளது.

                           ***************

தினமும் 300 முதல் 400 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தர தயாராக இருப்பதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

                           ***************

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18- முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது.

                           ***************

இளையோருக்கான உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மேலும் 7 பேர் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.

                           ***************

நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யூரியா உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கு மானியம் வழங்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

                           ***************

விடைத்தாள் நகல்களை கட்ட ணம் செலுத்தி தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

                           ***************

உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 57 லட்சம் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக முறையில் நியமிக்க ஏதுவாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

                           ***************

உலகின் 10-ஆவது உயரமான மலைச் சிகரமான அன்ன பூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பிரியங்கா மோஹிதே. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் இவர் ஆவார்.