ஜலந்தர்:
‘பதஞ்சலி’ நிறுவன முதலாளியும்- சாமியாருமான ‘பாபா’ ராம்தேவ், கொரோனா தொற்று தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்பி,மக்களிடம் பீதியை ஏற்படுத்தியதாக, இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) அகில இந்தியத் துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜோத் சிங்தாஹியா குற்றம் சாட்டியுள் ளார்.
இதுதொடர்பாக ஜலந்தர் மாநகர காவல்துறையிடம் வீடியோ ஆதாரங்கள் அடங் கிய புகார் ஒன்றை டாக்டர் நவ்ஜோத் சிங் தாஹியா அளித் துள்ளார்.அண்மையில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராம்தேவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது அவதூறான மற்றும் அவமதிக்கும் வகையிலான மொழியை பயன்படுத்தினார்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன் படுத்தப்படும் ரெம்டெசிவிர் மற்றும் ஆன்டி-பயோடிக் ஊசிமருந்துகளாலேயே நோயாளிகள் மரணம் அடைவதாகவும் அவர் பீதியை ஏற்படுத்தினார்.இவ்வாறு செய்ததன் மூலம் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சிகிச்சைபெற விடாமல், அவர்களை மரணக் கட்டைகளை நோக்கி ராம்தேவ் தள்ளினார்.மறுபுறத்தில், கொரோனா சிகிச்சைக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தங்களின்பதஞ்சலி நிறுவனத் தயாரிப்பு (Coronil Kit) மருந்துகளை சட்டவிரோதமாக விற்று, ராம்தேவும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் பொதுமக்களிடம் திட்டமிட்டு பணம் பறித்தனர்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி ராம்தேவையும்,அவரது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவையும், 2005-ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் 1897-ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.இவ்வாறு டாக்டர் நவ்ஜோத் சிங் தாஹியா வலியுறுத்தியுள்ளார்.