india

img

பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்த உயர்மட்டக்குழு அமைப்பு...

புதுதில்லி:
பருவநிலை மாற்றம்தொடர்பான நடவடிக்கை களில் பாரீஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையேயான உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள் ளது.மத்திய சுற்றுச்சூழல், வனம்- பருவநிலை மாற்றம் அமைச்சகம் அமைத்துள்ள இந்த குழுவின் தலைவராக சுற்றுச்சூழல், வனம்-பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் செயலாளர் இருப்பார்.14 அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த உயர்மட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். 

பருவநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்கி, தேசியஅளவில் முடிவெடுக்கப் பட்டுள்ள பங்களிப்பு உட்பட பாரீஸ் ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் இந்தியாவை பூர்த்தி செய்ய வைப்பதே இந்த குழுவின் நோக்கமாகும்.பாரீஸ் ஒப்பந்தத்தின் ஆறாவது அம்சத்தின்படி, இந்திய கரியமில வாயு வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்களுக்கான சந்தைகளின் தேசிய ஒழுங்குமுறை யாளராகவும் இக்குழு இருக்கும்.