india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடியின் கொள்கைகள்: எவ்வித கூச்சநாச்சமுமின்றி கூட்டுக் கொள்ளையர்களின் நலன்களை உயர்த்துதல்; தேசத்தின் வளங்களை பகற்கொள்ளையடிக்க அனுமதித்தல்.யெச்சூரி: ஆகஸ்ட் 19/ ஜூன் 2020 காலத்தில் ஜி.டி.பி 23.9 சதவீதம் வீழ்ச்சிஅடைந்தது.  ஆனால் இதே காலகட்டத்தில் இந்திய பில்லியனர்களின் வருமானம் 35 சதவீதம் உயர்ந்தது. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துவைத்திருக்கும் 828 இந்தியர்களின் சொத்து 21 சதவீதம் உயர்ந்தது. பொருளாதாரம் வீழ்ந்தாலும் இவர்களின் சொத்து உயர்ந்துகொண்டேஉள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், அக்டோபர் காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் தமது வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர். 274மில்லியன் மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு இருநூறுரூபாய் மட்டுமே ஈட்டினர். இன்னொரு 100 மில்லியன் மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி தீர்ந்துவிட்டது என திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் இதேகாலகட்டத்தில் 50 கார்ப்பரேட்டுகளின் பங்கு சந்தை மதிப்பு 200 பில்லியன்டாலர்கள் அதாவது ரூ.14 லட்சம்  கோடி உயர்ந்தது. சென்ற ஆண்டைவிடஏழு மடங்கு அதிகம். தேசிய வளங்கள் தனியார் மயம்!மக்களின் நலன் அழிப்பு.மோடியின் ஆட்சி யாருக்காக என்பது தெளிவு.

                                               ***********************

செய்தி: பல நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது ஊட்டச்சத்து உணவு உட்கொள்வதில் இந்தியா பின்தங்கியுள்ளது.

யெச்சூரி: பெரும்பான்மையான இந்தியர்கள் ஊட்டச்சத்து உணவை வாங்குவதற்கான நிதி வசதி இல்லாதவர்களாக உள்ளனர். ஊட்டச்சத்துபெறுவதை தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி அரசின் உதவியை அழிப்பதாகும். அரசு உதவியை மறுப்பது என்பது பசி/பட்டினியை அதிகரிக்கும்;ஊட்டச்சத்தை குறைக்கும்; மனிதாபிமானமற்ற பல துன்பங்களை விளைவிக்கும். புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு ஒரு உதாரணம்!எனவேதான்இந்த சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என வலியுறுத்துகிறோம்.

                                               ***********************

செய்தி: பெரும்பாலான இந்தியர்கள் உடல் ஆற்றலுக்கு தேவையான அளவு உணவை உண்ணும் வசதி இல்லாதவர்கள். 

யெச்சூரி: உணவு உற்பத்தியில் உபரி இல்லாத தேசமாக இந்தியா உள்ளதுஎன பிரதமர் கூறுகிறார். இந்த குறைபாட்டை நீக்கத்தான் விவசாயத்தில்அரசின் தலையீடு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பொது விநியோகமுறை மூலமாக இருக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.இதன் மூலம் விவசாயத்தில் தன்னிறைவை எட்டமுடியும். அரசு தலையீட்டை ஒழிப்பது என்பது பேரழிவில்தான் முடியும் வேளாண்சட்டங்களை உடனே திரும்பப்பெறுங்கள்.

                                               ***********************

செய்தி: தீபாவளிக்குப் பிறகு பொருளாதாரம் மீண்டும் கீழ் நோக்கி பயணிக்கிறது.

யெச்சூரி: பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது என அனைத்து குறியீடுகளும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பொழுது தேசத்தின் பொருளாதாரம் மீண்டு கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி வாயால் வடை சுடுவது போல பொய்ப்பிரச்சாரம் செய்கிறார். பொருளாதாரம் மீட்சி பெற வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவு பொருட்களும் உடனடியாக தாருங்கள்.பிரதமர் மோடியால் பொருளாதார புள்ளி விவரங்களுக்கான ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணரான முனைவர் புரோனோப் சென்  மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் சரிந்த 9.5 சதவீதத்திற்கும் அதிகமாக  சரிவு அடையும் என்று கூறுகிறார். பொருளாதாரத்தை அழித்துவிட்ட பிரதமர் மோடிஇப்பொழுது பொருளாதார வளர்ச்சியின் பசுமை பாய்ச்சல்கள் தெரிகின்றன என்று வாய்ப்பந்தல் போடுகிறார்.

                                               ***********************

மத்திய அரசாங்கம் : இந்திய மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடவேண்டிய தேவை இல்லை!

யெச்சூரி: தடுப்பூசி என்றாலே அனைத்து இந்திய மக்களுக்கும் போடுவதுஎன்பதுதான் விடுதலை அடைந்த நாளிலிருந்து நடைமுறை. கோவிட்தடுப்பூசிகளும் இவ்வாறு கண்டிப்பாக அனைத்து மக்களுக்கும் தரப்பட வேண்டும். மோடி அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.பிரதமரின் தனிப்பட்ட நிதியில் குவிந்துள்ள கோடிக்கணக்கான கணக்கில்வராத பணத்தை இதற்கு பயன்படுத்துங்கள்.

                                               ***********************

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் மூலமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இத்தகைய முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன்பு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம்கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கலந்தாலோசிக்கப்படவில்லை. நாடு விடுதலை அடைந்த காலத்திலிருந்து இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்கும். சமீபகாலமாக இத்தகைய ஜனநாயக நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றுவது இல்லை.

                                               ***********************

பிரதமர் மோடி அவர்களே!நமக்கு அன்னமிடும் கைகளின் குரல்களை செவிமடுங்கள்! உண்மையான இந்தியா எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது! வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெறுங்கள்.

+++++++++++++++++++

சமூக வலைத்தளங்களில் வாசிக்க....   

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;