headlines

img

மீண்டும்...

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பிரதமர்மோடி, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்வோம் என்றும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைஏற்படுத்துவோம் என்றும் கூறினார். ஆனால் நடந்துவரும் கொடிய நிகழ்வுகள் அவர் கூறியதற்கு நேர்மாறாக அமைந்துள்ளன. ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் பசு குண்டர்களால்ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையான யாசிர் உசேன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.திங்களன்று பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் முகமது ஹாசிம் என்ற இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயரை கூறுமாறு கேட்டு அவர் முஸ்லிம் அடையாளத்துடன் கூடிய பெயரை தெரிவித்தவுடன் ‘பாகிஸ்தானுக்கு ஓடி விடு’ என்று கூறி கடுமையாக தாக்கியதாக முகமதுஹாசிம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகமுதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதும் யாரும் கைது செய்யப்படவில்லை. 

மத்தியப் பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி மே 22ஆம்தேதி தாக்குதலுக்குள்ளாகினர். அவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுமாறு சித்ரவதை செய்து தாக்கியுள்ளனர். இதேபோல முஸ்லிம் தம்பதியினரை கடுமையாக தாக்கிய கொடூரமும் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை தனித் தனி சம்பவங்களாக கொள்ள முடியாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவினர் விதைத்த வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவே இத்தகைய தாக்கதல்களாகும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் பசுக் குண்டர்கள்  பல்வேறு இடங்களில் அத்துமீறி நடந்து கொண்டனர். சிறுபான்மை இஸ்லாமியர், தலித் மக்கள் பசுக்கறிவைத்திருந்ததாக அடித்து மிரட்டப்பட்டனர். முகமது அக்லக் படுகொலையும் நடந்தது. இந்தசம்பவங்களில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். 

பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை பதவி கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். பசு இறைச்சி தொடர்பாக பெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. மதவெறியை விசிறிவிட்டு மக்களை பிளவுபடுத்தி அதைதங்களது தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்வதே பாஜகவினரின் நோக்கமாக இருந்தது. இந்த மக்களவைத் தேர்தலிலும் பசுவின் புனிதம் குறித்த கட்டமைப்பு பிரச்சாரத்தின் மையமாக மாற்றப்பட்டது. இந்த பின்னணியில்தான் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதச்சார்பற்ற இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஒரு வலதுசாரி பிற்போக்கு நோக்கு கொண்ட நாடாக இந்தியாமாற்றப்படுவது இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.  

;