headlines

img

வேலை நிறுத்தம்  விடுக்கும் எச்சரிக்கை

 இந்திய தொழிலாளி வர்க்கம் அழைப்பு விடுத்திருந்த அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து துறைவாரி சம்மேளனங்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள், அரசு ஊழியர், ஆசி ரியர் அமைப்புகள் என பல அமைப்புகள் பங்கேற்ற இந்த வேலைநிறுத்தம் நாட்டை நாசகரப் பாதையில் நடத்திச் செல்லும் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஆட்சியதிகாரம் கையில் இருக்கிறது என்ப தற்காக அதிகார மமதையுடன் நடந்து கொள்கிறது மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பெரும்பா லும் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்துள் ளன. தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவ தன் மூலம் குறைந்தபட்ச சட்ட, சமூக பாதுகாப்பி லிருந்தும் துண்டிக்கப்பட்டு தொழிலாளர்கள் நிர்கதியாக விடப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. இனியும் இதை அனுமதிக்க முடியாது என்று இந்திய மக்கள் போர்க்கோலம் பூண்டதன் வெளிப்பாடே நாடு தழுவிய வேலைநிறுத்தமாகும். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை களால் பாதிக்கப்படும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதை தடுப்பதற்காக மதரீதியாக மக்களை கூறுபோடும் சட்டங்களும், திட்டங்க ளும் கொண்டு வரப்படுகின்றன. குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கை களுக்கெதிராக இந்த வேலைநிறுத்தம் நடை பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஏவி விடப்பட்ட அடக்குமுறைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஒன்றுபட்டு போராடியுள்ளனர்.  இந்த வேலைநிறுத்தத்தை உடைப்பதற்காக தமிழக அதிமுக அரசு காவல்துறை மூலம் மேற் கொண்ட நடவடிக்கைகள் மிகவும் இழிவானவை. இதுவரை இல்லாதவை.  அரசு அலுவலகங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி அலுவலகங்க ளுக்கு சென்று நேரடியாக காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். மேலும் கட்சி ஊழியர்களின் வீடுகளுக்கே சென்று மிரட்டிவிட்டு வந்துள்ளனர். இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை யான ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது.  மோடி அரசுக்கு தன்னுடைய எஜமான விசு வாசத்தை காட்டுவதற்காக அதிமுக அரசு ஜன நாயக உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதை அனுமதிக்க முடியாது. பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியைப் பிடித்த மோடி அரசு தன்னுடைய சொந்த நாட்டு மக்களுக்கெதிராக ஒரு யுத்தத்தையே தொடுத்துள்ளது. இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் விடுத்துள்ள போர்ப் பிரகடனம்தான் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம். உழைக்கும் மக்களின் போராட் டங்களே இறுதி வெற்றி பெறும். இதுவே உலக அனுபவம்.

;