headlines

img

அமெரிக்கத் தலையீடு ஆபத்தையே விளைவிக்கும்

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கம் குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்தக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நம்முடைய எல்லைப் பகுதியில், சீன ராணுவம் ஊடுருவவும் இல்லை, நமது எல்லைச் சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை என்று கூறினார். 

இதைத் தொடர்ந்து, அப்படியென்றால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந் திருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது.  இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவல கம், பிரதமரின் பேச்சு திரித்து கூறப்பட்டுவிட்ட தாக விளக்கம் அளித்தது. அயல்துறை அமைச்ச கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளும் கூட ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளன. 

இதுகுறித்து கேள்வி எழுப்புபவர்கள் விஷ மத்தனமானவர்கள் என்று பாஜக தரப்பில் வியாக்கியானம் செய்யப்படுகிறது. பிரதமர் அலு வலகம் மற்றும் அயல்துறை அமைச்சகத்தின் முரண்பட்ட அறிக்கைகள் சர்ச்சைக்குரிய பகுதி எது என்பதிலேயே முரண்பாடு இருப்பதைக் காட்டு கிறது. இதை விளக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மாறாக மத்திய அரசின் தடு மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குவதை தேச விரோதம் என்று வியாக்கியானம் செய்வது பொருத்தமற்றது. 

எல்லைப் பகுதியில் உயிரை ஈந்த வீரர் களின் தியாகத்தையும் தீரத்தையும் நாட்டு மக்கள் அனைவரும் போற்றுகின்றனர். அதை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக மத்திய அரசின் குழப்பமான அணுகுமுறையையும், பிரதமரின் தடுமாற்றத்தையும் கேள்விக்குள்ளாக்குவது ராணு வத்தினரை கொச்சைப்படுத்துவது ஆகாது. கடந்த  காலங்களிலும் கூட இத்தகைய சித்து வேலைக ளிலேயே பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவினரின் போலித்தனமான ‘தேசபக்த கூச்சல்’ மூலம்  உண்மை நிலையை மறைக்க முயல்வது இனியும் நடக்காது.

எல்லைப் பிரச்சனையை இருதரப்பும் பரஸ் பர நல்லெண்ணம், நம்பிக்கை அடிப்படையில் தீர்த்துக் கொள்வது என முடிவெடுத்திருப்பது சரி யானது. தற்போது எல்லையில் நடந்த மோதல் எதிர்காலத்தில் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். ஒரு கொடும் நோயை எதிர்த்து இரு அண்டை நாடுகளும் போராடிக் கொண்டிருக்கும் நிலை யில் நீண்டகாலமாக உள்ள எல்லைப் பிரச்ச னையை முன்வைத்து மோதல் நடப்பதும், வீரர்க ளின் உயிர் பலியாவதும் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும். 

இதனிடையே இப்பிரச்சனையில் சமாதா னம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெ ரிக்கா கூறுவதை இரு தரப்பும் தீர்மானகர மாக நிராகரிக்க வேண்டும். லடாக் எல்லைப் பிரச்ச னையில் அமெரிக்க மூக்கை நீட்ட முயல்வதை துவக் கத்திலேயே நிறுத்தும் வகையில் இந்தியாவும், சீனாவும் தக்க பதிலை அமெரிக்காவிடம் தெரி வித்து விட வேண்டும்.   

;