headlines

img

உரிமையை இழந்துவிட்டால் உள்ளதும் பறிபோகும்

விவசாயிகளுக்கு இலவச மின்திட்டம் தொட ரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி யுள்ளார். ஆனால் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்தச் சட்டம் 2020 நடை முறைக்கு வருமானால் இது சாத்தியமல்ல. அந்த சட்டத்தை எதிர்க்காமல், அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அறி விக்காமல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்வதோ, தமிழகம் அளித்துவரும் மின்மானியத்தை தொடர்வதோ சாத்தியமல்ல. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உதய் மின் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று அறிவித்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அந்தத் திட்டத்தை நிர்ப்பந்தமாக தமிழகத்தின் தலையில் கட்டிவிட்டது மோடி அரசு.

இலவச மின்சாரம் ரத்து என்பது மட்டுமல்ல, மின்விநியோகம் உள்ளிட்ட பல்வேறு மின்துறை சார்ந்த பணிகள் மத்திய அரசின் கைகளுக்கு சென்றுவிடுமானால் இலவச மின்சாரத் திட்டத்தை தொடர்வது சாத்தியமல்ல. மாநிலங்கள் கடன்பெறுவதற்கான உச்ச வரம்பை தளர்த்தவேண்டுமானால் மின்விநியோ கத்தை தனியார்மயப்படுத்த வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஓரிரு மாவட்டங்களிலாவது இதை நடைமுறைப்படுத்தினால்தான் மத்திய அரசு கடன்பெற ஒத்துழைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்கமாக மிரட்டுகிறார். அதை கண்டிக்க தெம்பில்லாமல், இலவச மின்சாரம் ரத்ததாகாது என்று வெற்று நம்பிக்கை தெரிவிப்பதால் மட்டும் பயனில்லை. நீட் தேர்வு விசயத்திலும் இப்படித்தான் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. மாநில அதிகாரங் களை பறிக்கும் சட்டங்களை ஏற்றுக்கொண்டு விட்டு அதனால் பாதிப்பு வராது என்று கூறுவது வெறும் வார்த்தைகளேயன்றி வேறல்ல.

 தமிழகம் கேட்ட அளவுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றும் கடந்த ஏப்ரல், மே மாதங்களி லும் மார்ச் மாதத்தில் ஏழு நாட்களும் தமிழ கத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள தால் 35ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ள முதல்வர் ஜிஎஸ்டி வரியில் தமி ழகத்தின் நியாயமான பங்கை வாதாடி, போராடி பெறுவதற்குப் பதிலாக இதை ஈடுகட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்று சமாளிக்கிறார். மத்திய அரசின் வஞ்சகத்தால் ஏற்படும் சுமையை சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் தமிழக மக்களின் தலையில் கட்டவே அதிமுக அரசு முயல்கிறது.

புதிய வேலை நிய மனங்களுக்குத் தடை உள்ளிட்ட நடவடிக்கை கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளை ஞர்களின் தலையில் இடியாக இறங்குகிறது. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தியிருப்பதும் புதிய வேலைவாய்ப்பை பாதிக்கவே செய்யும். தமிழகத்தின் உரிமை களுக்காக போராடுவது ஒன்றுதான் வழியே தவிர மத்திய பாஜக அரசிடம் பணிந்து சென்றுவிட்டு வாய்வார்த்தைகளை அள்ளி வீசுவது பலனளிக்காது.

;