headlines

img

இலவசமாக தருவதே சரியானது

சென்னை நகரில் சிதிலமடைந்த குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது.  

தேசிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற கொள்கையின்படி செயல்படும் இத்திட்டத்தில் 532சதுர அடி பரப்பில் ஒவ்வொரு வீடும் கட்ட வேண்டும். ஆனால் 400 சதுர அடிப் பரப்பில்தான் கட்டப்படுகிறது. இந்த வீடுகளுக்கான கட்டுமான செலவில் மத்திய அரசு 40 விழுக்காடும், மாநில அரசு 40 விழுக்காடும் ஏற்றுக் கொள்கின்றன. மீதமுள்ள 20 விழுக்காடு தொகையை பயனாளி கள் செலுத்த வேண்டும். இதற்கு பொதுமக்களி டையே ஆட்சேபனை எழுந்துள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்போர் பெரும்பான்மையானோர் வீட்டு வேலை, கூலி வேலைசெய்யும் முறைசாரா தொழி லாளர்கள். இவர்களது வேலை குடியிருப்பை சுற்றியே உள்ளது. அதற்கேற்ப அருகாமையிலே யேதான் வாடகை வீடுகளை தேட வேண்டும். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒரே நேரத்தில் வீடு தேடும்போது, வீடு கிடைப்பதில்லை; வாடகை யும் உயர்கிறது. ஒரு படுக்கை கொண்ட வீட்டிற்கு  10 ஆயிரம் ரூபாய் வரை வாடகை கேட்கின்றனர். இதுதவிர மின்கட்டணம், தண்ணீர் கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். புதிய வீடுகள் கட்டி  முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். அதுவரை வாடகை வீட்டில் தான் தங்க வேண்டும். ஒரே நேரத்தில் வாடகையும் கொடுத்துக் கொண்டு, புதிய வீட்டிற்கு மொத்தமாக லட்சக்கணக்கில் 20 சதவீதத் தொகை எப்படி கட்ட முடியும்? 

எனவே, பழுதடைந்த குடிசைமாற்று வாரிய  வீடுகளை இடித்துவிட்டு, பரப்பளவை அதிகரித்து இலவசமாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதுதான் சரியானது. சென்னையில், 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பிறகு மெரினா கடற்கரையில் உள்ள  நொச்சிகுப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை யிலான வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நொச்சிக்குப்பத்தில் மட்டுமே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எஞ்சிய இடங்களில் இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ?

எனவே புதிய வீடுகள் கட்டி முடிக்கும் வரை  பயனாளிகள் குடியிருப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்; புதுப்பித்து வீடு கட்டும்போது அந்தப்பகுதியில் பூங்கா, சமூக  கூடம், விளையாட்டு திடல், நூலகம், படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம், நியாய விலைக் கடை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும்; புதிய குடியிருப்பு கட்டிய பிறகும் கழிவு நீர், குப்பை அகற்றுதல், பராமரித்தல், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் குடிசை மாற்று வாரியமே செய்ய வேண்டும் என நியாயமான கோரிக்கைகளை மக்களும், மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எழுப்பியுள்ளன. குடிசைகள் இல்லாத, மக்கள் வாழும் பகுதியில் குப்பைகள் இல்லாத, சுகா தாரமான வாழ்விடத்தை உருவாக்கும் திட்டங் கள் மந்த கதியில், அலட்சியமான முறையில் நடந்துகொண்டிருக்கும் இந்த உண்மை களை மறந்துதான் மோடியின்  தூய்மை பார தத்தை விழுந்துவிழுந்து புகழ்ந்துகொண்டிருக் கிறார்கள் அவரது துதிபாடிகள் என்பதும்  எண்ணிப்பார்க்கத்தக்கது.

 

;