headlines

img

துணை போகலாமா?

மக்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த நாட்டில் சட்டங்கள் வரையறுக் கப்பட்டிருந்தாலும், அந்த உரிமைகள் எல்லா மனி தனுக்கும் சமமாக கிடைப்பதில்லை. உலகில் ஒரு குடிமகனின் மிக முக்கிய உரிமைகளில் ஒன்றாக பேச்சு மற்றும் கருத்து உரிமைக்கான சுதந்திரம் கரு தப்படுகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் 19-வது பிரிவில் சுதந்திர உரிமைகள் அனைத்து தரப்பு மக்களுக்குமானது என்று கூறப்பட்டுள்ளது. பேச்சுச் சுதந்திரம் (பத்திரிகைச் சுதந்திரம்), கூட்டம் நடத்தும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யும் உரிமை, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக வாழும் உரிமை ஆகியவை நமது அரசியல் சாச னம் நமக்கு வழங்கியுள்ள முக்கியமான உரிமைக ளாகும். ஆனால் நடைமுறையில் இந்த உரிமைகள் இந்திய குடிமகன்களுக்கு கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அதுவும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு வந்தபிறகு 2014 ஆம் ஆண்டு முதல் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகி றார்கள். நடுநிலையோடு செயல்படும் ஊடகங் கள் மிரட்டப்படுகின்றன. அல்லது வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் நெருக்கடி கொடுக்கப்படுகின்றன.

பத்திரிகைச் சுதந்திரத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தை பொறுத்தவரை 183 நாடுகளில் இந்தியா 140ஆவது இடத்தில் உள்ளது. ரஃபேல் போர் விமான விவ காரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து பத்திரிகைச் சுதந்தி ரத்தை நீதிமன்றம் நிலைநாட்டியது. சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த தற்காக திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அம்மாநில காவல் துறை கைது செய்து சித்ரவதை செய்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை கடந்தவாரம் விசாரித்த அகர்தலா உயர் நீதிமன்றம் சமூக வலைதளங்களில் கருத்து கூறு வது அடிப்படை உரிமை என்றும் இது அரசு ஊழி யர்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என்றும் கூறி மாநில பாஜக அரசின் தலையில் ஓங்கி அடித்துள்ளது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துக் கூறும் உரிமை பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்லா மல் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று பேசப்படும் காலத்தில் மத்திய பாஜக அரசு தொடர் ந்து அதை நசுக்கும் வகையில் நடந்து கொள்கிறது. அதற்கு தாளம்போடும் வகையில் தமிழக  அதிமுக அரசும் செயல்படுகிறது.  சென்னை புத்தக கண்காட்சியில் அரசுக்கு எதிரான நூல்களை விற்பதற்கு பபாசி மூலமாக தடைவிதிக்கப்பட்டதும் அதன் ஒருபகுதிதான். பத்திரிகைச் சுதந்திரத்தை  உயர்த்திப் பிடிக்க வேண்டிய இந்த அமைப்பு இப்படி நடந்து கொள்வது மோசமான முன்னுதாரணமாகிவிடும். கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு என்று உள்ள பாரம்பரியத்தை அழிப்பதற்கு துணை போகாமல் அதை பாதுகாக்கும் வகையில் பபாசி நடந்து கொள்ளவேண்டும்.கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மிரட்டல்களையும், நிர்பந்தங்களையும் புறந்தள்ளவேண்டும்.

;