headlines

img

தில்லியில் பாஜக-வின் வெறுப்புப் பிரச்சாரம்

தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரம், வன்முறை யைத் தூண்டும் விதத்தில் மத வெறி பிடித்த வெறுப்புப் பேச்சுக்க ளின் அடிப்படையில் அமைந்துள்ள பாஜகவின் அவமானகரமான பிரச் சாரத்தைப் பார்த்துக்கொண்டி ருக்கிறது. மோடி அரசாங்கமும், பாஜகவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப்பதிவேடு ஆகியவற்று க்கு எதிராக மிகவும் விரிவான அள வில் அமைதியான முறையில் நடை பெற்று வரும் கிளர்ச்சிப் போராட் டங்கள் மீது எதேச்சதிகாரத்துடன் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவே ஷாஹீன் பாக்கில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களைக் குறிவைத்துத் தன் வெறுப்புப்பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர்கள் அனைவரும் தேச விரோத நட வடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் கள் என்றும் ஷாஹீன் பாகிற்கு மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில், தேர்தலில் மக்கள் தங்கள் வாக்கு எந்திரத்தின் பொத்தானை அழுத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள்

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், “தேசத் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள்” என்று பொருள் படும்படி கூச்சலிட்டிருக்கிறார். இவ்வாறு பேசுவது  வன்முறையை வெளிப்படையாகவே தூண்டு வதேயன்றி வேறல்ல. பொதுக் கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ஒருவர்  வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பது மிகவும் ஆழமான விஷயமாகும். இதற்கு அடுத்தநாள், தில்லி யிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பாஜக-வின் நாடாளு மன்ற உறுப்பினர், பர்வேஷ் ஷர்மா, என்பவர் இதைவிட மேலும் மோசமான முறையில், “ஷாஹீன் பாகில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.  அவர்கள் உங்கள் வீடுகளிலும் நுழைய முடியும், உங்கள் சகோதரிகளையும், மகள்களையும் வன்புணர்வுக்கு உள்ளாக்கி அவர்களைக் கொல்ல முடியும்,” என்று பேசியிருக்கிறார். இத்தகைய பேச்சுக்களும், கூற்றுகளும் தேர்தல் ஆணை யத்தால் கடும் நடவடிக்கை எடுப்ப தற்கு உரியவையாகும். கபில் மிஸ்ரா என்கிற பாஜக-வின் வேட்பா ளரின் வன்முறையை கக்கிய பேச்சுக்கு எதிராக 48 மணி நேரம் தடை விதித்ததுபோல், இவர்க ளுக்கும் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்வதிலிருந்து தடை விதித் தால் அது போதுமானதல்ல. (கபில் மிஸ்ரா, “தேர்தல் என்பது தில்லி யின் வீதிகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடை பெறும் விளையாட்டுப் போட்டி” என்றும், “ஷாஹீன் பாக் ஒரு மினி-பாகிஸ்தான்” என்றும் பேசியிருந்தார்.)

தடை - கிரிமினல் வழக்கு

தேர்தல் ஆணையமானது, நரேந்திர மோடி, அமித் ஷா போன்று உயர் மட்டத்தில் உள்ளவர்களின் மதவெறி அறை கூவல்களையும், வெறுப்புப் பேச்சுக்களையும் தடுத்திடக்கூடிய விதத்தில் வல்லமைபொருந்திய தல்ல என்பது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபோது மெய்ப்பிக்கப்பட்டிருந்தது. இப்போதும்கூட அது, இவ்வாறு பேசியவர்களுக்கு எதிராக (அவர்களில் ஒருவர் மத்திய அமைச்சர்) வலுவானவிதத்தில் நட வடிக்கை எடுக்காது. ஆணையம், அவர்கள் இருவரையும் நட்சத்திரப் பிரச்சாரர்களாக இருப்பதிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று மட்டும் தான் பாஜக-விடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பொருள், அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியும் என்பதேயாகும். குறைந்தபட்சம் அது என்னசெய்திருக்க வேண்டும் என்றால், அவர்களைப் பிரச்சாரம் மேற்கொள்வதிலிருந்து தடை செய்திருக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம், அவர்களுக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்திட நிர்வாகத்தினருக்கு கட்டளை பிறப்பித்திருக்க வேண்டும்.

ஜார்க்கண்டு போல்...

குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடிமக்கள் பதிவேடு-தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ச் சிப்போராட்டங்களில் ஈடுபட்டி ருப்போரை, ‘தேசத் துரோகிகள்’ என்றும், ‘பாகிஸ்தான் ஆதரவா ளர்கள்’ என்றும், ‘நாட்டைத் துண் டாட சதி செய்பவர்கள்’  என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா வும், பாஜக தலைவர்களும் கண்ட னம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   இவர்களின் இத்தகைய அணுகு முறைதான், கர்நாடக மாநிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியுரி மைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடகம் நடத்திய குழந்தைகள் மீது கூட தேசத்துரோகம் இழைத்ததாக வழக்குப் பதிவு செய்ய இட்டுச் சென்றிருக்கிறது. 

பாஜகவின் இத்தகைய கடுமை யான பிரச்சாரம் மக்களின் அடிப்படை உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்கிறது. ஆனாலும், தில்லி மக்கள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், பொது போக்கு வரத்து, மின்சாரம், குடிநீர் விநியோ கம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு என தங்கள் மாநகரின் அடிப்படைப் பிரச்சனை கள் குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக-வின் சூழ்ச்சிகள் ஜார்க்கண்ட் மாநி லத்தில் தோல்வி அடைந்ததைப் போன்று, தில்லியிலும் படுதோல்வி அடைந்திடும் என்பதைக் கற்றுக் கொள்ளும்.  

தமிழில்: ச.வீரமணி


 

;