headlines

img

யாரைக் காப்பாற்ற முயல்கிறார் அமித்ஷா

தலைநகர் தில்லியில் நடந்த வன்முறை வெறி யாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தபோதும், ஆளுங் கட்சியான பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் தில்லி வன்முறை குறித்து புதனன்று மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். 

தில்லி கலவரம், வன்முறை சம்பவங்களில் ஈடு பட்டவர்களை தப்பிக்கவிட மாட்டோம். மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அமித்ஷா. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட நட வடிக்கை அனைத்தும் பாரபட்சமாக அமைந் துள்ளதோடு கலவரத்தில் ஈடுபட்டு சிறுபான்மை மக்களை திட்டமிட்டு தாக்கிய இந்துத்துவா கும்பலை பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. 

தில்லி வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்று கூறுகிறார் அமித்ஷா. அந்த சதியை திட்டமிட்டு அரங்கேற்றியது ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்தான். இதை வெளிப்படையாக கூற அமைச்சர் தயங்குவது ஏன்? வன்முறையை தூண்டும் வகை யில் பேசிய பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அமைதியான முறையில் போராடி வந்த இஸ்லா மிய மக்களை மிரட்டும் வகையிலும் தில்லி காவல்துறைக்கு கெடு விதிக்கும் வகையிலும் அவர் விஷம் கக்கினார்.

டிரம்ப் இந்தியாவில் இருக்கும் வரையில் தான் அமைதி காப்போம், அதன்பிறகு சாலையில் இறங்கி அடித்து நொறுக்குவோம் என்று கபில் மிஸ்ரா வெளிப்படையாக மிரட்டினார். அமித்ஷா வின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கபில் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கை கூட ஏன் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டது ஒன்றுதான் இவர்கள் எடுத்த நடவடிக்கை. நேர்மையாக பணியாற்ற விரும்பும் நீதிபதிகள் இதன் மூலம் அச்சுறுத்தப்பட்டார்கள்.

கலவரத்தை நடத்துவதற்காக உ.பி.யிலிருந்து 300 பேர் வரவழைக்கப்பட்டார்கள் என்று கூறுகிறார் அமித்ஷா. அவர்கள் யார்? அவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் கூறாதது ஏன்? முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்துத்துவா ரவுடிகள் கும்பல்தான் வன்முறை யில் ஈடுபட்டது என பல்வேறு ஊடகங்கள் தெரி வித்துள்ளன.

இந்தநிலையில் அமைச்சர் யாரைக் காப்பாற்ற முயல்கிறார். நேர்மையான விசாரணைக்கோ, உண்மையான நடவடிக்கைக்கோ மத்திய அரசு தயாராகயில்லை. இதனால்தான் அமைச்சர் அமித்ஷா பொத்தாம் பொதுவாக பேசுகிறார். இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று அவர் ராஜி னாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முற்றி லும் நியாயமானது. அப்பாவிகள் யாரும் தண் டிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிக்கொண்டே தன்னுடைய கட்சியினரை காப்பாற்ற அவர் முயல்கிறார். இதன்மூலம் நீதி தண்டிக்கப்படு கிறது.

;