headlines

img

மருத்துவத் துறையை சீரழிக்க ஒரு மசோதா

மருத்துவர்கள் மட்டுமின்றி, கல்வியாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் எதிர்த்த போதும், இந்திய மருத்துவக் கவுன் சிலுக்கு மாற்றாக என்று கூறிக்கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மக்களவையில் திங்களன்று அறிமுகம் செய்துள்ளார். 63 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய மருத்து வக் கவுன்சில் ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டதால் அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். இந்த மசோதா மருத்துவ மாணவர்களுக்கும் தற்போது மருத்துவ சிகிச்சை அளித்துவரும் மருத் துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவானது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்துள்ளன.

இந்த புதிய மசோதாவின்படி இளநிலை மருத்துவம் முடித்த மாணவர்கள் நெக்ஸ்ட் என்ற பெயரில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வை எழுதினால் மட்டுமே அவர்கள் மருத்து வர்களாக பணி செய்ய முடியும். மேலும் பல்வேறு மருத்துவ மேல்படிப்புகளுக்கு தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதில்லை எனவும் எம்பிபிஎஸ் முடிவில் எழுதப்படும் நெக்ஸ்ட் தேர்வின் அடிப்படையிலேயே மேல்நிலை படிப் பில் சேரமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும், தாய்மொழி வழியில், மாநில கல்வித் திட்டத்தின்படி படித்த மாணவர்கள் சேர விடாமல் தடுக்க நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். இது தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளைய டிக்கவே பயன்படுகிறது. பல தனியார் பள்ளிகள் பாடம் நடத்துவதை தவிர்த்து நீட் தேர்வுக்கு பயிற்சி என்று கூறி பல லட்ச ரூபாயை வசூல் செய்கின்றன. இதே போன்ற நிலை மருத்துவப் படிப்பை முடித்த பிறகும் உருவாவதற்கே நெக்ஸ்ட் தேர்வு பயன்படும். 

மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாண வர்களை வகைதொகையின்றி கொள்ளையடிக்க இந்த மசோதா வகை செய்கிறது. மருத்துவக் கல்வி யிலிருந்து மாநிலங்களை முற்றாக விலக்கி வைக்கவும் வழிகாட்டுகிறது.  மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் படித்து முடித்தபிறகு அவர்கள் படித்ததையே நிராகரிக்கும் வகையில் அகில இந்திய தேர்வு நடத்தப்படுகிறது.  பெரும்பாலும் மருத்துவத் துறை சாராதவர்க ளை கொண்டே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் என்பது மறுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத் தொடரில் அதிகபட்சமாக மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றுவது என இலக்கு வைத்து மோடி அரசு செயல்படுகிறது. மக்களுக்கு கேடு விளை விக்கும் மசோதாக்களில் இதுவும் ஒன்று.

;