headlines

img

வந்தேபாரத்தும் தனியாருக்கா?

வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வே வர லாற்றில் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லப்படு கிறது. காரணம் உள்நாட்டில் அதுவும் சென்னை  பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற் சாலையில்  (ஐ.சி.எஃப்) முதல்முறையாகத் தயா ரிக்கப்பட்டவை. வெறும் ரூ.98 கோடி செலவில் இந்த ரயில்களை நமது ஐசிஎப் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரயிலுக்கு  தனி என்ஜின் கிடையாது. புறநகர் மின்சார ரயில்க ளைப் போல் பெட்டியுடன் அவை வடிவமைக்கப் பட்டிருக்கும்.  மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டவை. நாட்டில் தயா ரிக்கப்பட்ட  முதல் இரண்டு ரயில்கள் புதுதில்லி - வாரணாசி இடையேயும், புதுதில்லி-காத்ரா இடையேயும் இயக்கப்பட்டு வருகின்றன. 

சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாக இருப்பதால், இந்த ரயிலுக்கு பய ணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதைய டுத்து, 44 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து வழங்கும் ஆணையை கடந்தாண்டு ஐசிஎப் ஆலைக்கு  ரயில்வே வாரியம் அளித்தது. அதன் படி, ஐசிஎஃப், கபுர்தலா மற்றும் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.  ஐசிஎஃப் பில் மட்டும் 22 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.  இங்கு முதல்கட்டமாகத் தயா ரிக்கப்பட்டுள்ள இரண்டு ரயில்கள் சென்னை - பெங்களூர் இடையே இயக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில் இந்த ரயில் உற்பத்தியைத் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டு 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளியை மோடி அரசு கோரியிருப்பது தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களால் உள்நாட்டிற்கு மட்டுமல்ல ஐரோப் பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அள வில் வந்தேபாரத் ரயில்களைத் தயாரித்து அளிக்க முடியும் என்று ஐசிஎப் அதிகாரிகளும் ஊழியர்களும் உறுதியாகக் கூறுகிறார்கள்.  சர்வ தேச அளவில் நடுத்தர, அதிவேக ரயில்கள் என்ற அழைக்கப்படும் இந்த ரயில்களை தனியா ரிடம் ஒப்படைத்தால் ஐசிஎப் தனக்கான ஆர்டர் களை இழக்க வேண்டியிருக்கும்.

 ஐசிஎப் போலவே மேற்கு வங்க மாநிலம் சித்த ரஞ்சன் லோகோ தொழிற்சாலையும் உலகப் புகழ் பெற்றது. இந்த ஆலையில்தான் இந்திய ரயில்க ளுக்கான என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது 9000 முதல் 12ஆயிரம்  குதிரை சக்தி கொண்ட அதிவேக ரயில் என்ஜினை இந்த ஆலையின் பொறியாளர்களும் ஊழியர்களும் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். சர்வ தேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த என்ஜின் தயாரிப்பையும் பன்னாட்டு நிறுவ னங்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கும் தொழி லாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சுயச்சார்பு பொருளாதாரம் என்று ஒருபக்கம் முழங்கிக் கொண்டு மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் மோடி அரசுக்கு தொழிலாளர்களின் வீரமிக்க போராட் டம் தக்க பாடம் புகட்டும்.

;