headlines

img

ஆரோக்கியத்துக்கு ஆபத்து

இந்தியாவில் மருத்துவ முதுகலைப்படிப்புக் காக சுமார் 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதை முதுகலைப் படிப்புக்கான “நீட்” என்று அழைக்கிறார்கள். இந்தத் தேர்வில் சேர்க்கை பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் என்பதையே நீக்கி, “பூஜ்யம்” வாங்கினாலே போதும் என்று மருத்துவப் படிப்புக் கான வழிகாட்டுதல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வுகளை தகுதித் தேர்வுகளாக அறி முகப்படுத்தியபோது, அது தகுதியை உத்தர வாதப்படுத்தும் என்ற வாதம் முன்வைக்கப் பட்டது. மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம் படுத்தும் வகையில் வினாத்தாள்கள் அமையும் என்று வல்லுநர்களும் கூறினர். அண் மைக்கால நிகழ்வுகள் இவை அனைத்தும் பொருந் தாதவையாக மாறிவிட்டதையேகாட்டுகின்றன.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பதே பொருத்தமில்லாத ஒன்றாகும். கல்வித் தரத்திலும், உயர்கல்விக்குச் செல்லும் எண்ணிக்கையிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதைச் சுட்டிக்காட்டி வந்துள்ளன. மாநிலப் பட்டியலுக்கு முழுமையாக கல்வியைக் கொண்டு வந்து, மாணவர் சேர்க்கையை பற்றி அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் பல மாநிலங்களின் கோரிக்கை யாக இருக்கிறது.

ஒருபுறம், அதிகப் பணம் செலவழித்து பயிற்சி பெற்றால்தான் நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும் என்று நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வரு மானம் கொண்ட குடும்பங்கள், பெரும் அளவில் கடன்களை வாங்கித் தங்கள் குழந்தைகளை ராஜஸ்தானின் கோட்டா போன்ற இடங்களில் சேர்க்கிறார்கள். அங்கு அழுத்தம் தாங்க முடியாத மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது வாடிக்கையானதாக மாறியிருக்கிறது.

மறுபுறத்தில், பணம் படைத்த குடும்பங்கள், தங்கள் குழந்தைகள் எவ்வளவு குறைந்த மதிப் பெண் வாங்கியிருந்தாலும் பணத்தைக் கொடுத்து இடங்களை வாங்கி விடுகிறார்கள். தற்போது முதுகலைப்படிப்பு நுழைவுத்தேர்வில் மதிப்பெண் பெறாவிட்டாலும் சேர்க்கை கிடைக்கும் என்ற தற்போதைய அறிவிப்பும் பணம் படைத்தவர்களுக்கே வாய்ப்பாக அமை யும். தனியார் கல்லூரிகள் தங்கள் பணப் பெட்டியை நிரப்பிக் கொள்ளவே இது உதவும்.

நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன என்ற சொத்தை வாதம் முன்வைக்கப்படுகிறது. நன்கொடை, லஞ்சம், கல்விக்கட்டணம் ஆகி யவை தாங்க முடியாதவையாக இருப்பதே மாண வர்கள் சேராததற்குக் காரணமாக உள்ளது. வணி கமயமாகி இருக்கும் மருத்துவப் படிப்பு வருங் கால சுகாதாரத்துறையை ஆரோக்கியமாக வைத்திருக்காது.  இது நாட்டின் நலனுக்கும் எதி ரானதாகும். வர்த்தகர்களின் பிடியில் இருந்து மருத்துவப் படிப்பை மீட்பதே தீர்வாக அமையும்.