‘‘உக்ரைன் போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் துவக்கினார்; எனவே அவர் தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்; எங்கள் பொறுப்பு அல்ல” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் ரஷ்யா மீதான நீண்ட போரை அமெரிக்க ஏகாதிபத்தியம் கைவிடுவதாக இல்லை. மாறாக, போரை தொடர்ந்து நீட்டித்து வருவது மட்டுமல்ல, வலுப்படுத்தியும் வருகிறது.
ரஷ்யாவை ராணுவ ரீதியாக சுற்றி வளைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களில் ஒன்றுதான், அதன் தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியில் உக்ரைனையும் இணைப்பது. உக்ரைன், நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணைவதாக அறிவித்த நிலை யில்தான், தனது எல்லை நேரடியாக நேட்டோ துருப்புக்களால் முற்றுகையிடப்படும் என்ற ஆபத்தை உணர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்கு தலை துவக்கியது. இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
ஆனால் இந்தப் போர் நடந்து கொண்டி ருக்கும் வேளையிலேயே நேட்டோ ராணுவக் கூட்டணியில் பின்லாந்தை 31வது உறுப்பு நாடாக இணைத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். நேட்டோவில் இணைந்து கொள்வதாக பின்லாந்தை அறிவிக்கச் செய்து, ஓரிரு நாட்களிலேயே அதற்கான அங்கீகாரத்தை அளிக்கச் செய்து, அவசர அவசரமாக நேட்டோ வின் உறுப்பு நாடாக மாற்றப்பட்டுள்ளது பின்லாந்து.
ரஷ்யாவோடு நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கிற முக்கியமான நாடு பின்லாந்து. ஏற்கெனவே நேட்டோ ராணுவக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்தோனியோ, லாத்வியா, லிதுவேனியா, போலந்து மற்றும் நார்வே ஆகிய ஐந்து நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பின்லாந்து 810 மைல்கள் தூரத்திற்கு நீண்ட எல்லை யை பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பின்லாந்து எல்லையிலிருந்து அமெரிக்கா வின் மிக முக்கிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், வெறும் 100 மைல் தொலைவில் அமைந்துள் ளது. எனவே இப்போது ரஷ்யாவின் இதயமான பகுதியை தாக்குவது என அமெரிக்க ஏகாதி பத்தியம் முடிவெடுத்தால் பின்லாந்து எல்லையை அதற்கு களமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், ரஷ்யாவை மேலும் சுற்றி வளைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் திட்டத்திற்கு பின்லாந்து பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய ரஷ்யா, சோவியத் ஒன்றியமாக உதயமான பிறகு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், சோசலிச சோவியத் ஒன்றி யத்தை ராணுவ ரீதியாக மிரட்டுவதற்கும் சுற்றி வளைப்பதற்கும் அன்றைக்கு ஐரோப்பிய கண்டத் தில் 13 நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்டது நேட்டோ ராணுவக் கூட்டணி. இப்போது சோவி யத் ஒன்றியம் இல்லை என்ற போதிலும் ரஷ்யா வுக்கு எதிராக இரண்டு மடங்கு பலத்தோடு நேட்டோ அச்சுறுத்துகிறது. இதை ராணுவ ரீதியாக வும் எதிர்கொள்ள வேண்டிய புவி அரசியல் கட்டாயத்தில் புடின் தள்ளப்பட்டிருக்கிறார்.