headlines

img

மதவெறியர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்

ராஜஸ்தான் மாநிலத்தின் ரம்ஜான் பண்டிகை யின் போது, ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்த வர்கள் மிகப் பெரிய வன்செயலை நிகழ்த்தியுள்ள னர். இதன்காரணமாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டதோடு, சிறுபான்மை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

சமீபகாலமாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து ஆர்எஸ்எஸ் பரிவாரம் தாக்குதல் தொடுத்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் அவர்களது வாழ்வுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உடைக்கப்பட்டதோடு அரசியல் சட்டத்  தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை யை கிளப்பி முஸ்லிம் குழந்தைகள் படிப்பதை தடுத்து நிறுத்த சதிச் செயலில் ஈடுபட்டனர். ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழாக்  களின் போது மத்திய பிரதேசம், குஜராத், கோவா,  ஜார்க்கண்ட், மேற்குவங்கம், கர்நாடகம், தில்லி என பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்ட வன் செயல்களில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு முறையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை தடை செய்து பல இடங்களில் பறிமுதல் செய்து தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் தில்லி ஜஹாங்கீர்புரி உள்ளிட்ட இடங்களில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் குடிசைகளை அகற்றுகின்றனர். இப்படி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சிறுபான்மை இஸ்லா மிய மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்செயல் களை நடத்துவதோடு அவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 

இந்தப் பின்னணியில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் கலவரத்தை ஆர்எஸ்எஸ் பரிவாரம் திட்டமிட்டு அரங்கேற்றி யுள்ளது. முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் கரவ்லி நகரில் புத்தாண்டு ஊர்வலம் என்ற பெயரில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜலோரி கேட் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் வன்முறையை தூண்டியுள்ளனர்.

சிறுபான்மை மக்களை பழிவாங்குவது, சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி மாநில  காங்கிரஸ் அரசுக்கு இடையூறு செய்வது என்ற  இரட்டை நோக்கத்தோடு கலவரம் தூண்டப் பட்டுள்ளது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய  ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங், ராஜஸ்தானில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார். மாநில அரசு உடனடியாக அமைதி யை நிலைநாட்டுவது அவசியம். அதே நேரத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மதவெறி  சக்திகளுக்கு எதிராக ஒன்று திரண்டு அமைதி யை நிலைநாட்டுவதோடு கலவரக்காரர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம்.