headlines

img

துரோகம் இழைப்பது யார்?

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்ட நிகழ்வு தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று மெய்சிலிர்த்ததாக கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இந்த நிகழ்வை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும் தமிழ்க் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து  மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக் கிறார்கள் என்றும் சாபமிட்டிருக்கிறார். அத்து டன் தமிழுக்கு மகுடம் சூட்டியதற்காக பிரதம ருக்கு கோடானுகோடி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் மன்னராட்சி ஆட்சிக் காலத்து செங்கோல் நிறுவப்படுவது முற்றிலும் அதன் நோக்கத்துக்கு எதிரானது. அத்தகைய செயலை தேசியம் என்ற பெயரி லும் தெய்வீகம், புனிதம் என்ற போர்வையிலும் ஆர்எஸ்எஸ் இயக்குகின்ற பாஜக ஒன்றிய அரசு,  முதல் பிரதமராம் நேருவுக்கு தமிழ்நாட்டி லிருந்து ஆதீனம் சார்பாக வழங்கப்பட்ட செங் கோலை திடீரென்று தேடிக் கண்டுபிடித்து மரி யாதை செய்வதாக பம்மாத்து வேலைகள்செய்கிறது.

இந்த திறப்பு விழாவில் புதிய நாடாளுமன்றத் தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ் என்று தமிழிசை புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழிலேயே பேசு வதற்கும் அதற்கு அமைச்சர்கள் தமிழிலேயே பதில் அளிப்பதற்கும் வசதி ஏற்படுத்தித் தந்திருந் தால் அது தமிழுக்குப் பெருமையாக இருந்திருக் கும். ஒன்றிய அரசும் பிரதமர் மோடியும் தமிழ்  மீது உண்மையிலேயே பற்றும் பாசமும் வைத்திருப் பதாக இருக்கும். ஆனால் அவ்வாறின்றி கட்டடத் திறப்புவிழாவில் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடத்தியிருக்கும் சூழலில், தமி ழுக்குப் பெருமை சேர்த்திருப்பதாக பிரதம ருக்கு கோடானுகோடி நன்றியை மனமார தெரி விப்பதாக தமிழிசை கூறியிருப்பது முரணாக இல்லையா?

வேண்டுமானால் தமிழக மக்களின் ஆதர வைப் பெற்று சட்டமன்றத்திற்கோ நாடாளு மன்றத்திற்கோ செல்ல முடியாத தமிழிசையை மாநில ஆளுநராக நியமித்து தெலுங்கானா, புதுவை சட்டமன்றங்களுக்கு செல்லும் வாய்ப்பை தந்திருப்பதற்காக இந்த நன்றியை தெரிவிக்கிறாரோ தமிழிசை. 

இந்திய அரசமைப்புச் சட்டப்படி நாட்டின் தலைவராகத் திகழும் குடியரசுத் தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே திறப்பு விழா நடத்துவதை எதிர்த்தே 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன. ஆனால் பிரத மர் மோடி ‘என் நாடாளுமன்றம் என் பெருமை’ என்று பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருவ தாகக் கூறியிருக்கிறார். இதுதான் அவரது உள்ளக் கிடக்கை என்பது வெளியாகிவிட்டதல்லவா?

உண்மையில் தமிழுக்குப் பெருமை சேர்ப்ப தாக இருந்தால் தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகையில் அது தெரியும். ஆனால், தமிழுக்கு  ஒதுக்கியது 2017-20இல்  வெறும் ரூ.23 கோடி என்பதும், தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு தலா 3 கோடி என்பதும் ஆனால் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டது 643 கோடி என்பதிலிருந்தும் யார் தமிழுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் துரோகத்திற்கு தமிழிசை தமிழ் முலாம் பூச வேண்டாம்.

;