headlines

img

மெல்லக் கொல்லும் விஷம்!

உலகம் முழுவதும் 115 கோடிக்கும் மேலான வர்கள் புகைப் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ள னர். உலகளவில் அதிகமாக புகைப்பிடிப்போர் பட்டியலிலும், புகையிலை உற்பத்தியிலும் இந்தியா  இரண்டாம் இடத்தில் இருக்கிறது.  புகை பிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில்  15.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். 

புகைப்பழக்கம் உள்ளவர்கள் பிடிக்கும் ஒவ் வொரு சிகரெட்டுக்கும் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு 5 நிமிடங்களையும் இழக்கின்றனர். புகைப்பழக்கத்தைக் கைவிட்டாலும் அதன் தாக்கம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும். அதன் பின்பே அதன் பாதிப்பிலிருந்து முழு மையாக விடுபட முடியும் என்கின்றன ஆய்வு கள். இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் ஏன் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து மக்களை மீட்க முடியவில்லை?

முதலில் புகைக்கும் போது புகையிலையிலி ருக்கும் நிக்கோடின் மூளையில் உள்ள டோ பமைன் எனும் திரவத்தைச் சுரக்கச் செய்கிறது. அது புகைபிடிப்பவர்களுக்கு புத்துணர்ச்சி, உற்சா கம் போன்ற போலியான நிலையைத் தற்காலிக மாக உருவாக்குகிறது. இது ஆபத்தை விளை விக்கும் என்று தெரிந்தே சிறு மகிழ்விற்காக புகையை நாடுகின்றனர். இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அரசும் மக்களும் இணைந்து நிற்க வேண்டும். 

சிகரெட் அட்டைப் பெட்டிகளில் உயிர்க் கொல்லி என அரசு அச்சிடுவதால் மட்டும் புகை பிடிப்பதிலிருந்து மக்களை முழுமையாக மீட்க முடியாது. அதன் உற்பத்தியை படிப்படியாகக் குறைத்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்தி, மொத்தமாக நிறுத்தும் நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். வரி வருவாய்க்காக அரசு அனுமதிக்கும் போது, அதனால் ஏற்படும் பாதிப்பு பன்மடங்கு தீங்கையே உருவாக்கும். 

உலக அளவில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்கள்தான் 80 சதவிகிதம் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். புகை யிலை பயன்படுத்துபவர்களில் சரிபாதி பகுதியி னர் அதன் பாதிப்புகளினாலே உயிரிழக்கின்ற னர் என்கிறது உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம். அதனால் இந்தாண்டு, “நமக்குத் தேவை  உணவு, புகையிலை அல்ல” என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானித்திருக்கிறது. 

இந்தியாவில் முதன் முதலில் பொது இடங்க ளில் புகைப்பிடிக்கக் கூடாது என்பதை கேரளா நடைமுறைக்குக் கொண்டு வந்தது . அதே போல் தமிழகம் மற்றும் கேரளாவில்  குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்க ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டும். ஒன்றிய அரசு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களைத் தயாரிக் கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது காட்டும் அக் கறையில், ஒரு பகுதியாவது மக்களின் சுகாதார நலனில் காட்ட வேண்டும்.  தொலை நோக்கு  பார்வையில் புகைப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்க திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 

 

;