headlines

img

பாஜகவின் கொலைக் கருவி

தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி செல வழிக்கும் பணம் தொடர்ந்து பலமடங்கு அதிக ரித்து வருகிறது என்பது, கடந்த செப்டம்பர் 20 அன்று தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கைகளின் வாயிலாக வெளிச்சத்தி ற்கு வந்திருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மொத்த மாக ரூ.344.27 கோடியை செலவழித்துள்ளது. இது ஐந்தாண்டுக்கு முன்பு இதே மாநிலங்களில் பாஜக செலவழித்த ரூ.218.26 கோடியை விட 58 சதவிகிதம் அதிகம் ஆகும். இதில் உத்தரப்பிரதே சத்தில் மட்டும் கடந்த தேர்தலில் 175.10 கோடியிலி ருந்து 221.32 கோடியாக அதிகரித்துள்ளது. 

இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், மேற்கண்ட ஐந்து மாநிலங்க ளில் 2022 ஜனவரி 8 அன்று சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அன்றைய தினம் முதல் அடுத்த 63 நாட்களில் மட்டும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அலுவலகத்திற்கு தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ.914 கோடி வந்து குவிந்திருக்கிறது. இந்த விபரத்தை அக்கட்சி யின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. 

உலகத்தில் எந்தவொரு ஜனநாயகத்திலுமே வெறும் 63 நாட்களில் 914 கோடி ரூபாய் ஒரு அரசி யல் கட்சியால் திரட்ட முடிந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்தியாவில் மட்டும், அதுவும் பாஜக வால் மட்டும் இது எப்படி சாத்தியமானது? 

இவர்கள் தங்களது ஆட்சியில் சட்ட விரோதத்தையே சட்டமாக்கியிருக்கிறார்கள். தேர்தல் பத்திரம் என்பது முற்றிலும் சட்ட விரோ தமான வழியாகும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங் கள் சட்டத்தை வளைப்பதற்காக, ஆளும் வர்க்க  ஆட்சியாளர்களோடு கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு, தங்களுக்கு சாதகமான முடிவுகளுக் காக, நடவடிக்கைகளுக்காக தருகிற லஞ்சப் பணம் தான் தேர்தல் பத்திரங்கள் என்ற வகையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கணக்குக ளுக்கு செலுத்துகிற பெரும் தொகை. இந்தத் தொகையை யார் செலுத்துகிறார்கள், எதற்காக செலுத்துகிறார்கள், யாருக்கு செலுத்துகிறார்கள் என்கிற எந்த விபரத்தையும் கொடுப்பவரும் சொல்ல வேண்டியதில்லை; வாங்குவோரும் சொல்ல வேண்டியதில்லை. சட்டப்பூர்வமாகவே சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு,  மக்களின் கண்களுக்கு மூடு திரை போட்டு விட்டு பல நூறு கோடிகளை கைமாற்றிக் கொள்கிறார்கள். 

அந்தப் பணம் - கள்ளப் பணம் - தேர்தல் களத்திற்கு வருகிறது. மக்கள் விலை பேசப்படு கிறார்கள்; பாஜக தோல்வியடையும் இடங்களில் எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களே விலை பேசப்படுகிறார்கள். 

தேர்தல் பத்திரங்கள் என்பவை ஜனநாய கத்தைப் படுகொலை செய்யும் ஒரு கொடிய கருவி. அந்த கொலைக்கருவியோடு உலா வரு கிறது பாஜக. அடுத்தடுத்த தேர்தல்களிலும் இது இன்னும் தீவிரமடையும். இதைத் தடுத்த நிறுத்த, தேர்தல் பத்திரங்களை முற்றாக ரத்து செய்க என்ற குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

;