headlines

img

உடைக்கப்பட்ட நாளில் உறுதியேற்போம்!

ஆயிற்று ஆண்டுகள் முப்பது. 

1992ஆம் ஆண்டு இதே நாளில் கரசேவை என்ற பெயரில் திரட்டப்பட்ட கலவரக்கும்பல்  அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. ராம பக்தர்கள் என்ற பெய ரில் அழைத்து வரப்பட்டவர்கள் திட்டமிட்டே மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள். 

இது ஒரே நாளில் நடந்த நிகழ்வல்ல. எந்த விதமான வரலாற்று ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற பொய்யை புனைந்துரைத்து அதை திரும்ப, திரும்பச் சொன் னார்கள். இதற்காக மோசடியான முறையில் சான்றுகளையும் உருவாக்கினார்கள். 

இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிலிருந்த வி.பி.சிங் தலைமை யிலான தேசிய முன்னணி அரசு மண்டல் குழு  பரிந்துரை அடிப்படையில் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப் போவதாக அறிவித்தவுடன், ராமருக்கு கோவில் கட்டப் போவதாகச் சொல்லி பாஜக தலைவர் அத்வானி ரதயாத்திரையை துவக்கினார். மண்டலா? கமண்டலா? என்ற விவாதம் நடைபெற்றது.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தர வையும் மீறி, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பாஜக அளித்த வாக்குறுதியையும் மீறி அயோத்தி யில் திரட்டப்பட்டவர்களால் பட்டப்பகலில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த ரணம் இன்னமும் ஆறவில்லை. அவர்கள் அத்து டன் நிற்கவில்லை. காசி, மதுரா என்று அடுத்த டுத்த இடங்களும் எங்களின் இலக்கு என்று கொக்கரித்தார்கள்.

சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் இடித்தவர்களிடமே அந்த இடத்தை ஒப்ப டைக்குமாறு உச்சநீதிமன்றம் விநோத தீர்ப்பு வழங்கியது. அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, வழங்கப்பட்டது தீர்ப்பே அன்றி, நீதி யல்ல என்று விமர்சித்தது. 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் யாருமே  தண்டிக்கப்படவில்லை. அத்வானி, முரளிமனோ கர் ஜோசி, உமாபாரதி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறை மேல் முறையீடு கூட செய்யவில்லை. மேல் முறையீடு செய்தவர்களை நோக்கி, மசூதி இடிக்கப்பட்டதால் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன பாதிப்பு என்று கேட்டனர் நீதிமான்கள். 

2024 தேர்தலில் ராமருக்கு கோவில் கட்டுவதை மட்டுமே பெரும் சாதனையாக முன்வைக்கப் போவதாக பாஜக கூறுகிறது. உ.பி., குஜராத் தேர்தல்களிலும் கூட இதுதான் பாஜகவினரின் சாதனையாக முன்வைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மையை, மத நல்லி ணக்கத்தை, உண்மையான வரலாற்றை பாது காக்க உறுதியேற்க வேண்டிய நாளாகவும், இன்றைய நாள் இருக்கிறது.

;