headlines

img

தகுதியற்ற சட்ட அமைச்சர்

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் சொன்ன போது அதை எதிர்த்த வர் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை திருமணம் தொடர்பான முக்கிய மனுக்களை உச்ச நீதி மன்றம் விசாரித்து வரும் நேரத்தில், சட்ட அமைச் சராக பதவியேற்றுள்ளார். இன்றைய புதிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்  மேக்வால்தான் 2012 ஆம் ஆண்டு மக்களவையில் ஓரினச்சேர்க்கைக்கு  எதிராக தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்த வர்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவை ‘அரசியலமைப்புக்கு எதிரானது’ மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று  2009  ஆம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ப  இல்லை என்று வாதிட்டவர் இவர். அந்த தீர்ப்பை நீர்த்துப்போகச்செய்யும் வகையில் தனிநபர் மசோதாவை  அவர் மக்களவையில் கொண்டுவந்தார். இந்நிலையில்தான் 377ஆவது பிரிவின்படி ஓரினச்  சேர்க்கை குற்றம்  என  2013 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அந்த  தீர்ப்பைப் பாராட்டியவர்தான் இந்த மேக்வால்.   இப்படிப்பட்டவர் தான் இந்தியாவின் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வரை சட்ட அமைச்ச ராக இருந்த  கிரண் ரிஜிஜுவின் முன்னோடியான ரவிசங்கர் பிரசாத், டிவிட்டர் நிறுவனத்துடன் முரண்பட்டதால் சட்ட அமைச்சர்  பதவியிலி ருந்து  அகற்றப்பட்டார்.  உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்ற  நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத் திற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்ததால் நீதிபதிகளால் கண்டனத்திற்கு ஆளானவர் தான் ரிஜிஜு. 51 வயதான அமைச்சருக்கு முதிர்ச்சி யும், சட்ட முன்மாதிரிகளை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவும் இல்லை என்று நீதிபதிகள் காட்ட மாகக் கூறினர். 

தகுதியற்ற ஒருவரைச் சட்ட அமைச்சராக் கிய மோடி அரசு  அவர் மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டியபோது அதற்கு  விலை கொடுக்க வேண்டியிருந்தது. சட்ட அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே கிரண் ரிஜிஜு வுக்கும்,  உச்சநீதிமன்ற  கொலீஜியத்துக்கும் இடையே  மோதல் துவங்கியது. இதன் பின்னரும் பிரதமர் கண்டிக்காமல் நீதிபதிகளை கேவலமாக பேசுவதை வேடிக்கை பார்த்தார்.  

கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் கே.எம். ஜோசப், எஸ். முரளிதர், வழக்கறிஞர்கள் ஆர். ஜான் சத்தியன், சோம சேகர் சுந்தரேசன், சவுரவ் கிர்பால், அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் உள்ளிட்டோரின் நிய மனங்களை தாமதப்படுத்தியதும் கிரண் ரிஜிஜு தான். 

இவை அனைத்திற்கும் மேலாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேச விரோத சக்திகளுடன் இருப்பதாக கிரண் ரிஜிஜு பேசி யது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறி யது. எனவே நிலைமை மேலும் மோசமடையா மல் இருக்கவே தற்போது அமைச்சரை மோடி அரசு மாற்றியுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக நியமிக்கப்பட்ட மேக்வால் சரியான மாற்று அல்ல.