ஜன்தன் வங்கிக் கணக்குகள் 50 கோடியை கடந்திருப்பது முக்கியமான சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள் ளார். 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப் போகிறோம் என்று கூறி ஜன்தன் திட்டம் துவக்கப்பட்டது.
50 கோடியை, தாண்டிவிட்ட ஜன்தன் கணக்கு களில் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகள் மகளி ருக்கு சொந்தமானது என்பது மகிழ்ச்சியளிப்ப தாக பிரதமர் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு மானியம் கழித்துக் கொள் ளப்பட்டு மலிவு விலையில் நுகர்வோருக்கு உரு ளைகள் வழங்கப்பட்டன. ஆனால் மோடி அரசு முழுத்தொகையையும் செலுத்தி எரிவாயு உருளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பின் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும் என்றும் கூறியது. இதற்காகவே பலர் ஜன் தன் கணக்கு துவங்குமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஆனால் மானியத் தொகை முழுமை யாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக மானியத்தின் அளவை குறைத்துக் கொண்டே வந்துள்ளனர். இந்த மோசடியை மறைப்பதற்காகவே ஜன்தன் கணக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல ஒன்றிய அரசின் பல்வேறு மானி யங்கள் மற்றும் நலத்திட்டத்திற்கான தொகை யும் முறையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படு வதில்லை. மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்ச மாக மானியம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பறிக்கவே ஜன்தன் கணக்கு பயன்படுத்தப்படு கிறது.
இதுதவிர வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறி பொதுமக்களின் பணம் சூறையாடப்படுகிறது. குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்காகவும், ஏடிஎம் சேவை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 35 ஆயிரம் கோடி அளவிற்கு பொதுமக்களின் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கித் துறையில் தனியார் ஆதிக்கம் அதிகரித்த பிறகு பல்வேறு வகைகளில் பொது மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் பொதுத்துறை மற்றும் மூன்று தனியார் வங்கிகளால் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறிவாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 4,990 கோடி சுருட்டப்பட்டுள்ளது. இந்த அபராதத்திற்கு ஜிஎஸ்டி வரிவசூலிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை. ஒருபுறத்தில் கார்ப்பரேட் கொள்ளையர்களின் கடன்களை வராக் கடனாக அறிவித்து தள்ளுபடி செய்வது, மறுபுறத்தில் பல்வேறு காரணங்களைச் சொல்லி எளிய மக்களின் பணத்தை சுருட்டுவது.
வங்கி என்பது ஒரு சேவைத் துறை. ஆனால் அதையும் கூட மக்களை மறைமுகமாக சுரண்டு வதற்கான களமாக மாற்றி வைத்திருப்பதுதான் மோடி அரசின் மற்றுமொரு சாதனை. இதில் பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது?