headlines

img

பாஜகவின் மும்பை ஆட்டம்

ஆள்பிடி அரசியல், குதிரை பேரம் போன்ற வற்றை தன்னுடைய அரசியல் கலையாக கையாளும் பாஜக தனது கை வரிசையை மகா ராஷ்டிராவிலும் காட்டியுள்ளது. அதனால் அந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற் பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. 288 பேர் கொண்ட சட்டப் பேரவையில் சிவசேனை 56, தேசியவாத காங்கிரஸ் 53, காங்கிரஸ் 44 என்று இடம் பெற்றிருந்த நிலையில் இந்தக் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக குறுக்கு  வழியில் ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சி களை மேற்கொண்டது.

ஒட்டுமொத்தமாக ஆளும் கூட்டணியில் 169 எம்எல்ஏக்களும், பாஜக கூட்டணியில் 113 எம்எல் ஏக்களும் இருந்தனர். 

இந்நிலையில் அண்மையில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் சிவசேனை எம்எல்ஏக்கள் சிலரை கடத்தி வைத்து, எதிர்பார்த்ததை விட ஒரு இடத்தை கூடுதலாக பாஜக பெற்றது. 

சிவசேனை கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 21 எம்எல்ஏக்களை பிடித்துச் சென்று அசாமில் தங்க வைத்துள்ளனர். வழக்கமாக பல்வேறு மாநிலங்களில் பாஜக கையாண்ட அதே வழிமுறையைத்தான் தற்போது மகாராஷ்டிராவிலும் கையாளுகிறது பாஜக.

ஆனால் எதுவுமே தெரியாதது போல பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் சிவசேனைக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறுகிறார். ஆனால் அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் சிவசேனை கூட்டணி அமைத்து ஆட்சிய மைத்தால் தான் தங்களது ஆதரவு என்று கூறுவதன் மூலம் தங்களை இயக்குவது யார் என்பதை வெளிப்படுத்திவிட்டார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் அதை ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமரும் பக்குவம் பாஜகவுக்கு இல்லை. மாறாக எப்படியாவது எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். கர்நாடகம், கோவா, பாண்டிச்சேரி உட்பட பல மாநிலங்களில் இந்த அணுகுமுறையைத்தான் பின்பற்றினார்கள். 

இந்நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யக்கூட தயாராக இருப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வரை பாஜகவும் சிவசேனையும் கூட்டணி அமைத்திருந்தன. ஆனால் கடந்த தேர்தலுக்குப் பிறகு முதல்வர் யார் என்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனை கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிர சோடு ஆட்சி அமைத்தது. 

ஒன்றிய ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி இந்த அரசுக்கு பல்வேறு சிக்கல்களை பாஜக ஏற் படுத்தியது. தற்போது மறைமுகமாக மீண்டும் ஆட்சி யமைக்க முயல்கிறது. இத்தகைய ஜனநாயக விரோத முகம்கொண்ட பாஜக அனைத்து நெறி களையும் அழித்து வருகிறது.

;