headlines

img

திசை திருப்பல் திலகங்கள்

ஒரு வழியாக பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாட்டு மக்க ளுக்கு ஓர் அறிவிப்பை தனித்தனியாக வெளி யிட்டுள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பினால் வரும் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவ தில்லை என்று மாபெரும் தியாகம் செய்வதைப் போல கூறியுள்ளனர்.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது மதவெறிக் கும்பல்கள் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டத்தை நடத்தி 47 உயிர்களை காவு  கொண்டுள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத உள்துறை அமைச்சகத்தையும், அமைச்சரையும் கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் அறிஞர்களும் அறிக்கை விடுத்தனர்.  அப்போது கூட வாயைத் திறக்காமல் கள்ள மவுனம் சாதித்த பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இப்போது திடீரென்று ஏதோ நினைவு வந்தது போல கொரோனா வைரஸ் பாதிப்புக்காக ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளது நகைக்கத்தக்கதாக உள்ளது. 

தில்லி நகரமே அல்லோலகல்லோலப்பட்டு கிடந்த போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே மதவெறி கும்பல்களின் ஏவல் துறையாக மாறிய போதெல்லாம் வாயைத் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது மக்களுக்காக கவலைப் படுபவர்கள் போல அதுவும் ஹோலிப் பண்டிகை கொண்டாடுபவர்களுக்காக இத்தகைய அறிக் கையை விடுத்திருப்பது திசை திருப்பும் நாடகமே.

கொரோனா வைரஸ் தாக்குதல் அண்மைக் காலமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகாட்டத் துவங்கி தற்போது 25 பேர் பாதிப்புக் குள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரியவந்தி ருக்கிறது. அதற்காக நாடு முழுவதும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் தடுப்பு மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. அது அரசு இயந்திரத்தால் தீவிர உணர்வோடு செய்ய வேண்டிய இன்றியமையாத பணியே.  ஆனால் அந்த சமயத்திலும் கூட பிரதமர் மோடி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றி லிருந்து வெளியேறப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். பிறகு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்காக அதை பயன்படுத்தப் போவதாக கூறி முடித்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த அறிவிப்பையும் வெளியிட்டார். அவரை அமித்ஷாவும் பின்பற்றியுள்ளார்.

அறிவியல்பூர்வமான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை  மேற்கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கம் போல்  மாட்டுச்சாணமும், மாட்டுச் சிறுநீரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்கும்  என்று பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் சர்வரோக நிவாரணி யாக சித்தரித்திருந்தார்.அத்தகைய பத்தாம் பசலித்தனமான மூட நம்பிக்கைகளை கைவிட்டு மருத்துவ அறிவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டிடுவோம்.

;