headlines

img

தொழிலாளர்களின் கடிதம்

தேசிய ஊடகங்கள் பெரிதாக கண்டு கொள்ளாத ஒரு கடிதம் அது. ஒன்றிய நிதிய மைச்சருக்கு சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும் துறை வாரியான ஊழியர் சம்மேளனங்களும் கூட்டாக  எழுதியுள்ள கடிதம். ஒன்றிய அரசின் பட்ஜெட் டில் உழைப்பாளி மக்களின் நலன்களை வலி யுறுத்தி அந்த கடிதத்தில் ஏராளமான விவரங்க ளை தொழிற்சங்கங்கள் விவரித்துள்ளன. 

குறிப்பாக கடந்த பத்தாண்டு காலத்தில் இந்திய தொழிலாளர் மாநாடு என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை மோடி அரசு நடத்தவேயில்லை. இத்தகைய மாநாடு நடத்தப் பட்டால்தான் தொழிலாளர் பிரச்சனைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். ஆனால் அதற்கு தொழிலாளர் விரோத மோடி அரசு தயாராக இல்லை.

மேலும், கடந்த பத்தாண்டு கால மோடி அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்துள்ளது. அதன் மூலம், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு தொகையை, பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தொழிலாளர் வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் முதலாளிகள் மாதந் தோறும் அளிக்க வேண்டிய பங்கு தொகையை முறையாகச் செலுத்தாவிட்டால், அதற்காக செலுத்த வேண்டிய அபராதத் தொகையின் விகி தத்தை பெருமளவு குறைத்துள்ளது. இது தொ டர்பாக தொழிற்சங்கங்களுடன் எந்த ஆலோ சனையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை.

இது போன்ற திட்டமிட்ட தாக்குதல்களை இந்திய உழைப்பாளி மக்கள் மீது மோடி அரசு ஏவியிருப்ப தை தொழிற்சங்கங்கள் விரிவாக சுட்டிக்காட்டி அந்தக் கடிதத்தை எழுதியுள்ளன.  

எதிர்வரும் பட்ஜெட்டில் இவை உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென்றும்,  மிகக் கடுமையாக மாறியுள்ள வேலையின்மை பிரச்சனையை பிரதான அம்சமாக எடுத்துக் கொண்டு அரசு, ஒன்றிய ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பல லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் வலி யுறுத்தியுள்ளன. 

மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக எத்தனை தீவிரமாக மதவெறியை மட்டுமே முன்னிறுத்தினாலும், இந்திய மக்களி டையே இந்தியா கூட்டணியும், சமூக செயற்பாட் டாளர்களும் வலுவாக மேற்கொண்ட பிரச்சாரம் காரணமாக செல்வங்களை உழைப்பாளி மக்களுக்கு மறு பங்கீடு செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி கூடுதலாக விதிப்பது இதுவரை வரி வரம்புக்குள் வராத பரம்பரை சொத்துக்கள் மீதான வரி விதிப்பது ஆகியவற்றையும் தொழிற்சங் கங்கள் வற்புறுத்தியுள்ளன. மோடி அரசு செவி மடுக்க வேண்டும். 

;