headlines

img

அன்றாடங்காய்ச்சிகளின் அடுப்பு எரிய வழி செய்வீர்

கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொரு நிமி டமும் வருகிற தகவல்களும், அறிவிப்புகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாக உள்ளன. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர். இதனுடைய வெளிப்பாடுதான் ஞாயிறன்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்த மக்கள் ஊரடங்கிற்கு நாடு முழுமையான ஆதரவு அளித்ததாகும். 

ஞாயிறன்று நாட்டின் பெரும்பாலான பகுதி களில் மக்கள் தாங்களாகவே முன்வந்து வீடு களில் தங்களை முடக்கிக் கொண்டனர். தமிழ கத்தில் ஞாயிறன்று இரவு ஒன்பது மணியோடு முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு திங்களன்று அதிகாலை 5 மணி  வரை நீட்டிக்கப்பட்டபோதும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர். எனி னும் மாநில அரசு தகுந்த முன்யோசனையின்றி பேருந்துகளை குறைத்தும் ரத்து செய்தும் வெளி யிட்ட அறிவிப்பால் வெளியூருக்கு செல்ல வேண் டிய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் அடைத்துக் கொண்டு சென்றனர். கூட்டம் கூடுவதை தவிர்ப்பதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்ற நோக்கத் திற்கு நேர் எதிர்மாறாக இது அமைந்தது. 

தற்போது அனைத்து பயணிகள் ரயிலும் ரத்து, மாவட்ட எல்லைகள் மூடல், பேருந்துகள் ரத்து என அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் மக்களின் அன்றாட வாழ்வை முற்றிலும் நிலைகுலைய வைத்துள்ளன.

இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதியினர் ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள்தான். இந்தியாவில் பெரும் பகுதி மக்கள் விவசாயத் தொழிலாளர்கள், முறைசாரா தொழி லாளர்கள், நடை வண்டி வியாபாரிகள், தலைச் சுமை வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள் போன்ற வர்களே ஆகும். அன்றாடம் உழைத்து பிழைப்ப தன் மூலமே இவர்களது வீட்டில் அடுப்பு எரியும். தற்போது சமூக நடவடிக்கைகள் முற்றாக முடக் கப்படும் நிலையில் இவர்களது வாழ்வாதாரத் திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டி யது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். 

பிரதமர் தன்னுடைய பேச்சில் இதுகுறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. மத்திய நிதி யமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அந்தக்குழு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புக ளை பற்றி மட்டுமே கவலைப்படுவதாக தெரி கிறது. அன்றாடங்காய்ச்சிகளைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. இந்த விசயத்திலும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுதான் நாட்டிற்கே வழிகாட்டும் நடவடிக்கை களை எடுத்து வருகிறது. பொது விநியோக முறை யில் இலவசப் பொருட்கள் தொழிலாளர்களுக்கு உதவி என அந்த மாநில அரசு நோய்த்தடுப் போடு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்ப தற்கான நடவடிக்கையையும் இணைத்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசும் இதேபோல செயல்பட முன்வர வேண்டும்.

;