headlines

img

உழைத்த உடல்கள் சிதறிக் கிடப்பதா?

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விஷவாயு விபத்தின் அதிர்ச்சி நீங்குவ தற்குள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரக்கு ரயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள்  16 பேர் உயிரி ழந்திருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா நோய்த் தொற்றின் கொடிய பிடியில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலை யில் இவ்வாறு அடுத்தடுத்து வரும் செய்திகள் மக்களை நிலைகுலையச் செய்கின்றன.

விசாகப்பட்டினம் எல்.ஜி. பாலிமர் ஆலையில் விஷவாயு கசிந்ததால் 12 பேர்  பலியாகினர்.  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அந்த ஆலையிலிருந்த ரசாயன டேங்குகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆலையை இயக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, களைப்பின் காரணமாக தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர். 

சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 16 பேர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை க்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஊருக்கு திரும்ப போதிய வசதி இல்லாத நிலை யில், நடந்தே சென்று விடலாம் என்று அவர்கள் முடிவெடுத்து நடந்து சென்ற நிலையில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

இதை ஒரு தற்செயலான விபத்து என்று மட்டும் கடந்து செல்ல முடியாது. கொரோனா  ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர் கள் படும் இன்னல்கள் சொல்லிமாளாது.  சொந்த மண்ணில் பிழைக்க வழியின்றி  பல்வேறு மாநிலங் களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்  ஊரடங்கு காரணமாக ஆலைகள் மூடப்பட்ட தால் கடும் பசியின் பிடியில் சிக்கினர். தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புமாறு  ஆங்காங்கே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பலமாநில அரசுகள் இதை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே கையாண்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

தமிழகத்தில் திருப்பூர் உட்பட பல இடங்க ளில் இத்தகைய போராட்டங்கள் நடக்கின்றன. ஊரடங்கை தொடர்ந்து தில்லி, மும்பை, பெங்க ளூரு உட்பட நாட்டின் பல இடங்களில் திரண்டு போராடிய புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க வில்லை. இவர்கள் எப்படியாவது போகட்டும் என்ற அலட்சியப் போக்கே வெளிப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவை ஏற்கக்கூட மோடி அரசு மறுக்கிறது. பின்னர் கடும் அழுத்தத்தின் காரணமாக ஒரு பகுதியை ஏற்க முன்வந்தது. இருந்தாலும் புலம் பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கு பெரும் பொறுப்பு மத்திய அரசையே சாரும். தண்டவா ளத்தில் தலை வேறு, கால் வேறாக  சிதறிக்கிடக்கும் உடல்கள் உழைப்பைத் தவிர வேறெதையும் அறி யாதவை. இந்த தேசமே வெட்கி தலைகுனிந்து நிற்கிறது.

;