headlines

img

கோயம்பேடு சந்தை திறப்பது எப்போது

சென்னை பெருநகரத்திற்குத் தேவையான காய், கனிகள், மலர்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட கோயம்பேடு மொத்த அங்காடி கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் மூடப்பட்டது. மாற்று ஏற்பாடாக பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தை யில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வில்லை. ஒரு சிறிய மழைக்கே சேறும் சகதியும் சேர்ந்து விற்பனையை கெடுத்துவிடுகிறது. மேலும் கோயம்பேடு சந்தை சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்தது. இதனால் சுற்று வட்டார சிறு வியாபாரிகள் காய்கறிகளை எளிதாக வாங்கிச் சென்றனர். திருமழிசை நகருக்கு வெளியே பல கி.மீ தூரத்தில் உள்ளதால் பெரும்பாலான வியா பாரிகளால் அங்கு செல்லமுடியவில்லை. இத னால் சென்னை நகரில் காய்கறிகளின் விலை கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து அதிக மான விலைக்கு விற்கப்படுகிறது.

பலநேரங்களில் சிறுகடை வியாபாரிகள் வராததால் திருமழிசை சந்தையில் காய்கறிகள் அழுகி வீணாகக் குப்பையிலும் மாடுகளுக்கும் கொட்டவேண்டியுள்ளது என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  மறுபுறத்தில் கோயம் பேடு காய்,கனி,  மலர் சந்தையை சுத்தப்படுத்தி புதுப்பிக்க அரசுக்கு 4மாதம் அவகாசம் இருந்தும் பணிகள் நடைபெறவில்லை.   இந்த சந்தையில் மொத்தம் 3,449 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினமும் சுமார் 150 டன் குப்பைகள் உருவாகின் றன. இதில் 99 சதவீதம் எளிதில் மக்கக்கூடிய தாவரக் கழிவுகளாகவும், 1 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளாக வும் உள்ளன. இந்த சந்தை வளாகத்தைத் தூய்மை செய்யும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டது. 

அதே நிறுவனம் சார்பில் தினமும் 30 டன் கழிவிலிருந்து 2,500 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் நிலையமும் திறக்கப்பட்டது. ஆனால் இந்த நிலை யம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெரும் பாலான நேரங்களில் இயங்குவதில்லை. மேலும் தொடர்புடைய தனியார் நிறுவனம் சந்தைப் பகுதி யிலிருந்து குப்பைகளை முறையாக அப்புறப் படுத்தவில்லை. 

இந்த சந்தையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016 இதுவரை முறையாக அமல்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கழிவுகளை மக்கச் செய்து ஒரு கிலோ இயற்கை உரம்கூட அங்கு உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் தினமும் சுமார் 150 டன் தாவரக் கழிவு களை பெருங்குடியில் கொட்டி அங்கு சூழலை மாசுபடுத்தி வருகின்றனர்.

தற்போது ரூ.4 கோடியில் கோயம்பேடு சந்தை புதுப்பிக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்(சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது. கோட்டை போல் கட்டப்பட்டுள்ள கோயம்பேடு சந்தை குப்பை கூடமாக மாறியதற்கு சிஎம்டிஏ அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம். விரை வாக சந்தையை புதுப்பித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் சென்னை நகர மக்களுக்குத் தட்டுப்பாடில்லாமல்  காய்கறிகள் கிடைக்கும். இந்த சந்தையை  நம்பி யுள்ள சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாது காக்கப்படும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேரும் குப்பைகளை அகற்றி சுகாதாரமாக பராமரிப் பதை சிஎம்டிஏ உறுதிப்படுத்தவேண்டும்.சுகாதார விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தரக் கூடாது.

;