மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் அவர்களின் குடிநீர் தேவையை தனியார் பள்ளி நிர்வாகங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் கூறுவது முற்றிலும் சரியே. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்க ளுக்குத் தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவது ஊருக்குத்தான் உபதேசம் என்கிற கதைபோல உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு சொல்லப்படும் அறிவுரை அரசு பள்ளிகளுக்கு பொருந்தாதா என்ன? மே மாத இறுதியிலேயே பள்ளிக் கூடங்கள் திறக்கும் தேதி பற்றிய குழப்பநிலை உருவானது. கடும் வெயில் சூழல் நிலவுவதால் ஜூன் மாதம் 3ஆம் தேதி திறக்கவிருந்த பள்ளிக் கூடங்கள் ஜூன் 10ஆம் தேதியன்று திறக்கப் படும் என்று தகவல் வெளியானது. ஆனால் அமைச்சர் செங்கோட்டையனோ இல்லை, இல்லை. 3ஆம் தேதியே பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என்றும் குடிநீர் பற்றாக் குறை ஏதுமில்லை என்றும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவசர அவசர மாக மறுத்தார். அத்துடன் பள்ளிகளின் அடிப் படை வசதிகள் கட்டாயம் பூர்த்தி செய்யப்படும் என்றும் ஓங்கியடித்தார். ஆனால் நிலைமை இன்னும் சீரானபாடில்லை. அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் 10 அன்று திறக்கப்படும் என்று காலநிலை கருதி அறிவிக்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையனோ பிடிவாதமாக ஜூன் 3 அன்றே பள்ளிகளை திறக்க உத்தர விட்டார். அதன் விளைவையே இன்று மாண வர்கள் அனுபவித்து வருகின்றனர். வழக்கமாக பள்ளிக்கூடங்கள் துவங்கிய தும் புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை 2,3,4,5 வகுப்பு மாண வர்களுக்கு இன்னும் புதிய பாடத்திட்ட புத்த கங்கள் வழங்கப்படவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே பாடப்புத்த கங்களை தயார்ப்படுத்துவதில் அக்கறை காட்டா ததும் தீவிர தயாரிப்புப் பணிகளில் ஈடுபடாததுமே இப்போது வரை புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருக்கக் காரணம். இதுதவிர கடந்த 2017- 18 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அதற்கே இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்கிறார் அமைச்சர். அப்படி யானால், 2018-19ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கொடுப்பார்கள்? தமிழக ஆட்சியா ளர்கள் தங்களின் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள காட்டிய அக்கறையில் சிறிதும் பள்ளி மாணவர்கள் மீது கவனம் செலுத்து வதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போனதில் ஆச்சரியமில்லை. தமிழக அமைச்சர்கள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் மிகக் குறையவே செய் கிறார்கள். அதனால் பள்ளி வளாகங்கள் கவலையில் இருப்பதுதான் இன்றைய சோகம்.