குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல் கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாண வர்கள் மீது ராம் பக்த் கோபால் என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஷாதாப் பரூக் என்ற மாணவர் படுகாயமடைந்துள்ளார்.
மதவெறியன் நாதுராம் கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி பலியான நாளில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள் ளது. மாணவர்கள் போராட்டத்திற்குள் நுழைந்து இந்துத்துவா வெறியனான ராம் பக்த் கோபால் துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்ச்சியளிக்கி றது என்றால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்த மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி மாநில போலீசாரின் அலட்சியம் ஆயிரம் மடங்கு அதிர்ச்சியளிக்கிறது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சாதாப் போலீசாரிடம் உதவி கேட்டு பேரிகார்டு மீது ஏறி நின்று வேண்டுகோள் விடுத்தபோதும், சிலையைப் போல அவர்கள் அசையாமல் நின்றுள்ளனர். காய மடைந்த மாணவரை சக மாணவ, மாணவிகள் தான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு இந் துத்துவா வெறியனான ராம் பக்த் கோபால் ‘சுதந்திரம் வேண்டுமா, இதோ வாங்கிக் கொள்’ என்று வெறிச்கூச்சல் இட்டதோடு போலீசாருக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டுள்ளான். இது தனித்தவொரு சம்பவம் அல்ல. ஏற்கெ னவே ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத் திற்குள் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசாரின் துணையுடன் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதில் சிலர் போலீஸ் உடை யிலேயே வந்திருந்தனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் ஏபிவிபி குண்டர்கள் நுழைந்து மாணவர் சங்க தலைவர்களையும், அவர்களுக்கு ஆதரவான பேராசிரியர்களையும் தேடித் தேடி குறி வைத்து தாக்கினர். அவர்கள் யார் என்பதற்கான காணொளி காட்சிகள் வெளியான பிறகும், அவர்களில் ஒருவர் கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை. மாறாக காயமடைந்த மாணவர்கள் மீதே தில்லி போலீசார் பொய் வழக்கு புனைந்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடு பவர்கள் மீது காவல்துறை ஒரு புறம் தாக்குதல் தொடுக்கிறது என்றால் மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் பகிரங்கமாக தாக்குதல் நடத்து கின்றனர். அவர்கள் மீது போலீசார் எந்த நடவ டிக்கையும் எடுப்பதில்லை. இதனால் ஊக்கம் பெற்றநிலையில்தான் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் தைரியம் ஒரு இந்துத்துவா வெறியனுக்கு வந்துள்ளது.
குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறு கிறார். இதுவரை இத்தகைய தாக்குதல்களில் ஈடு பட்டவர்கள் மீது அவர் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை முதலில் சொல்லட்டும். நாட்டை ஒரு அபாயகரமான திசையை நோக்கி ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் கொண்டு செல்கிறது. மதச் சார்பற்ற சக்திகள் கரம் கோர்த்து மனிதச் சுவராக நிற்க வேண்டிய நேரமிது.