headlines

img

போராட்டத்தை தூண்டும் முதல்வரின் பிடிவாதம்

சேலம், சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வது உறுதி என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதன் மூலம் மீண்டும் விவசாயிகளை போராட்டக்களத்திற்கு இறக்க முடிவு செய்துள் ளார். இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழகத்தின் கனிமவளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்குதடையின்றி கொள்ளைய டித்துச் செல்வதற்காகவே சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்ததேயன்றி இதனால் தமிழக மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த பயனும் இல்லை. தமிழகத்தின் வேளாண் உற்பத்தி அதிர்ச்சிய ளிக்கும் வகையில் சரிந்து வரும் நிலையில், விளை நிலங்களை மேலும் மேலும் பறிப்பது என்பது விவ சாயிகளை மட்டுமல்ல, தமிழகத்தையே வஞ்சிக் கும் செயலாகும். 

மோடி அரசின் தூண்டுதலால் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான நிலங்களை அளந்தது எடப்பாடி பழனிசாமி அரசு. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் உயிரை பணயம் வைத்து போராடினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த முயன்ற நடைபயணம் தடுக்கப் பட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் விவ சாயிகளை சந்திப்பது கூட ஜனநாயக விரோத முறையில் தடுக்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இந்த பின்னணியில்தான் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை பறிப்பதற்கு சென்னை  உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தேர்தல் நேரத்தில் மக்கள் அதிருப்தியை சமாளிப்பதற் காக மேல்முறையீடு செய்யாமல் இருந்த மாநில அரசு தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக மேல் முறையீடு செய்தது. எனினும் சென்னை உயர்நீதி மன்றம் நிலத்தை கையகப்படுத்த விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலை யில்தான், எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற் றப்பட்டே தீரும் என்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி கூறியுள்ளது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. 

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுக்காக்கப்படும் என்று முதல்வர் கதையளந்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். வேளாண் நிலங்கள் பாழாகும். வன உயிரினங்கள், அரிய வகை மூலிகைகள் அழிந்து போகும். பிறகு எப்படி சுற்றுச்சூழலை இவர் பாதுகாப்பார் என்று தெரியவில்லை.  அதுமட்டுமின்றி தொழில் வளம் பெருகும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இதுவரை தமிழ கத்தில் தொழில் வளம் பெருகாததற்கு சாலை வசதி மட்டுமே காரணமா? ஒரு வாதத்திற்காக இதை ஏற்றுக் கொண்டாலும் கூட இந்தத் திட்டத் தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன் பெறுமே யன்றி சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்கள் பாது காக்கப்படாது. எட்டு வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் என்று முதல்வர் மிரட்டுவாரேயானால் மக்கள் மீண்டும் போராட் டத்தின் மூலம் அதை முறியடிப்பார்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

;