headlines

img

பிரதமர் மோடியும் உரிய படிப்பினை கற்க வேண்டும்

கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் காணொலி மூலம் உரை யாடி வரும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள் ளார். அவர் கூறியுள்ள கருத்து மிகவும் சரியானது. 

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பல வற்றிற்கும் புதிய படிப்பினைகளை கற்றுத் தருவ தாக கொரோனா வைரஸ் தொற்று அமைந்துள் ளது. ஆனால் அதே நேரத்தில் மத்தியில் உள்ள மோடி அரசு படிப்பினைகளை கற்றுக் கொள்வ தாக தெரியவில்லை. 

இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட மதவாத வைரஸை பாஜக பரப்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம் சாட்டி யுள்ளதை நிராகரித்து விடமுடியாது. 

மாநில அரசுகள்தான் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னணி பாத்திரம் வகிக்கின்றன. ஆனால் மாநில அரசுகளை குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதி ஒதுக்கு வது உட்பட பல்வேறு விசயங்களில் மோடி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 

மத்திய அரசு மாநிலங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசுகள் தங்களுக்கு எதிரிகள் அல்ல என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சோனியா காந்தியுடனான உரையாடலில் குற்றம் சாட்டி யுள்ளனர்.

மாநிலங்கள் கோரும் அளவுக்கு நிதி ஒதுக்கா தது மட்டுமல்ல, அந்த அரசுகள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளையும் தடுக்கும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.

உதாரணமாக பிரதமர் திரட்டும் நிதியுதவிக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் மாநில அரசு கள் திரட்டும் நிவாரண நிதிக்கு வழங்கப்படுவ தில்லை. மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் இறக்குமதி செய்யவும் இடையூறு செய்யப்படுகிறது. சீனாவிடமிருந்து தமிழக அரசு இறக்குமதி செய்ய இருந்த ரேபிட் டெஸ்ட் கருவி களை தடுத்து அமெரிக்காவுக்கு மடைமாற்றி விட்டது இதற்கு ஒரு உதாரணமாகும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்ச னைக்கு மத்திய அரசுதான் ஒருங்கிணைந்த முறையில் தீர்வு காண முடியும். ஆனால் அதில் முற்றிலும் அலட்சியமான அணுகுமுறையையே மத்திய அரசு பின்பற்றுகிறது. 

மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் மக்கி மண்ணாகும் உணவு தானியங்களை பட்டினியால் வாடும் மக்களுக்கு வழங்க மறுப்பது, சுங்கக் கட்ட ணத்தை உயர்த்துவது, பெட்ரோல், டீசல் விலை குறையாமல் பார்த்துக் கொள்வது, கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் குறையாமல் பார்த்துக் கொள்வது என இந்த நெருக்கடியான நேரத்தி லும் மத்திய அரசு தன்னுடைய கார்ப்பரேட் ஆதரவு முகத்தையும், மதவெறி முகத்தையுமே வெளிக் காட்டுகிறது. பிரதமர் வழங்கியுள்ள அறிவுரையை அவர் தமக்குதாமே ஒருமுறை சொல்லிக் கொள்வது நல்லது.

;