headlines

img

வரும் முன் காப்போம்!

சீனாவில் துவங்கி உலகின் பல்வேறு நாடு களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் இந்தியாவிலும் தமிழகத்திலும் தென்படத் துவங்கியுள்ளது.

சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நோய்க்கு இதுவரை உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,600 என்று கூறப்படுகிறது.அதே நேரத்தில் ஏராளமானோர் இந்த நோயின் தாக்கத்திலிருந்து உரிய சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ளனர். இதன் மூலம் தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் அளிப்ப தன் மூலம் இந்த நோயின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களை விட கேர ளத்தில் இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருந்த நிலையில், திட்டமிட்ட நட வடிக்கையின் மூலம் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு பலரை காப்பாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் குறித்த பீதியை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மக்களுக்கு உரிய நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் வெற்று பர பரப்புக்காகவே இந்த நோய் குறித்த செய்திகள் ஊதி பெரியதாக்கப்படுகின்றன.

மருத்துவ விழிப்புணர்வு குறைவாகவே இருக்கும் நிலையில் பலரும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து தப்பிக்கும் வழி என்று பல்வேறு தகவல்களை பரப்புகின்றனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படுவதை விட பய உணர்வு ஏற்படுவதே அதிகமாக உள்ளது.  தமிழகத்திலும் சிலருக்கு இந்த நோயின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலை யில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் முழு அளவில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 39 பேருக்கு மட்டுமே இந்த நோய்த் தொற்று இருப்பதாக அதிகாரப்பூர்வ மாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்து வத்தை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ள சில பிற்போக்காளர்கள் கோமிய மும், பசுவின் சாணமும் கொரோனா தொற்றை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது என்று உளறி வருகின்றனர். அசாம்  மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே இந்த பரிந்துரையை செய்துள்ளார். 

பிரதமர் மோடி துவங்கி மத்திய அமைச்சர் கள் வரை பல்வேறு தருணங்களில் அறிவிய லுக்கு புறம்பாகப் பேசி வருவதன் வெளிப்பாடே இத்தகைய அபத்தங்கள் ஆகும். இந்த பிரச்சனை முழுக்க முழுக்க மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்திலேயே அணுகப்பட வேண்டும். வெற்று விளம்பரத்திற்காக அன்றி உண்மையிலேயே மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாக்க முன் வரவேண்டும்.

;