headlines

img

இப்போதாவது  ஏதாவது செய்யுங்கள்

 கொரோனா நோய்த் தொற்றை தடுப்ப தற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை களை உலகமே உற்று நோக்குகிறது என்றும் பாராட்டு மழை பொழிகிறார்கள் என்றும் பிரதமர் மோடி சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கி றார். ஆனால் நாளுக்கு நாள் நிலைமை மிகமிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஏழு லட்சத்தை தாண்டியுள்ளது. ஐந்து நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்போர் எண்ணிக் கையும் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருகிறது. இதுவரை 20 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணிநேரத்தில் 466 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றா வது இடத்திற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாவ தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை சமாளிப்பதில் துவக்கம் முதலே மோடி அரசிடம் அளவுகடந்த அலட்சி யமும், தேவையற்ற சுய பெருமிதமும் நிலவு கிறது. பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 100 நாட்களை கடந்து விட்டது. இந்த பொது முடக்கக் காலத்தை தன்னுடைய தனியார்மய நடவடிக்கைகளுக்கும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொண்ட தில் நூறில் ஒரு பங்கு அக்கறையைக் கூட நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் காட்ட வில்லை. இதன் விளைவை நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றினால் இந்தியா வை விட மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் கூட தற்போது பரவலை கட்டுப்படுத்தி உயிரிழப்பு விகிதத்தை குறைத்துள்ள நிலையில், மத்திய அரசு கையைப் பிசைந்துகொண்டு நின்று கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு நாளும் முரண்பாடான, குளறுபடி யான அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் தொடர்ந்து மக்களை அச்சத்தில் வைத்துள் ளது மோடி அரசு. மாநில அரசுகளை ஒருங்கி ணைத்துச் செயல்படுவதற்கு பதிலாக மாநில உரி மைகளையும், நிதியாதாரங்களையும் பறிப்பதில் தான் மோடி அரசு குறியாக உள்ளது.  இந்த நிலை நீடித்தால் கொரோனா நோய்த் தொற்றிலும் உயிரிழப்பிலும் முதலி டத்திற்கு இந்தியா சில வாரங்களில் வரக்கூடிய ஆபத்து உள்ளது. இப்போதாவது மக்களை பாது காக்க மோடி அரசு முன் வர வேண்டும். வெறும் வாய்ப் பந்தல் நிழல் தராது.

;