headlines

img

அம்பலப்படுத்தும் பிரச்சாரம்

“நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக் கிறது பொருளாதார வீழ்ச்சி என்று எதிர்க்கட்சி கள் கூறுகின்றன. அப்படி எதுவும் இல்லை” என நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மோடி 2 அரசின் முதலாவது பட்ஜெட் உரையின்போது கூறியிருந்தார். அடுத்த பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டது. பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. பொருளாதார வீழ்ச்சி இல்லை என்று கூறியதை மறந்து, பின்னர் அடுத்தடுத்த பேட்டிகளில் பொருளாதார வீழ்ச்சி யை அவர் ஒப்புக்கொள்ள நேர்ந்தது. ஆனால் அதற்குள் பொருளாதார வீழ்ச்சி என்பது பொரு ளாதார மந்தம் என்ற நிலையைஎட்டிவிட்டது.  இதன் விளைவாக மிகப்பெருவாரியான மக்களின் வாங்கும் சக்தி கூர்மையான முறை யில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கிராமப்புற நுகர் வோர் செலவுத்திறன் என்பது 8.8 சதவீதம் என்ற மிகப்பெரிய வீழ்ச்சி நிலையை எட்டியிருக்கிறது. எந்தவிதத்திலும் முன்னேற்றம் அடையாமல் மேலும் மேலும் ஆழமடைந்திருக்கிற விவசாய நெருக்கடி, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.35 சதவீதம் என்ற அளவிற்கு அதி கரித்துள்ள சில்லரை பணவீக்கம், அதன் விளை வாக மிகக்கடுமையாக அதிகரித்துள்ள விலை வாசி, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு அதிகரித்துள்ள வேலையின்மை, மிகப் பெரும் எண்ணிக்கையில் மூடப்பட்டிருக்கிற தொழிற்சாலைகள், அதன் விளைவாக வேலை யிழந்து வீதியில் நிற்கிற லட்சக்கணக்கான தொழி லாளர்கள் - என இந்தியப் பொருளாதாரம் மோடி அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளின் கொடுங்கரங்களில் சிக்கி நிற்கிறது.  மறுபுறம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில மிகப்பெரும் கார்ப்பரேட் பெருமுதலாளிகள்  இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மட்டும் கார்ப்பரேட் வரிச்சலுகை என்ற வகையில் மட்டும் 2.15லட்சம் கோடி ரூபாயை சுருட்டியுள்ளனர். மோடி அரசு அவர்களுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. இந்த மிகப்பெரிய தொகை, பொது நிதிக்கு திருப்பிவிடப்படுமானால் - பொது முதலீடு செய்யப்படுமானால் - நாடு முழுவதும் மக்களுக்குத் தேவையான அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் இந்த நிதியைக் கொண்டு நிறை வேற்றப்படுமானால் - புதிதாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்; துயரின் பிடியில் நிற்கிற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்; அப்படி வேலைகிடைக்கப்பெற்று ஊதியம் கையில் சேர்ந்து, அதை செலவழிக்கத் துவங்கினால் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி பொருள்களுக்கு மீண்டும் கிராக்கி ஏற்படத் துவங்கும்.  இது ஒரு எளிய பொருளாதார சூத்திரம் தான். ஆனால் மோடி அரசு இதை செய்யப்போவ தில்லை. ஏனென்றால், அடிப்படையில் மோடி அரசு கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் அரசு. பாட்டாளி வர்க்க மக்களுக்கு எதிரி இந்த  அரசு. இந்த சூட்சமத்தை பெருவாரியான மக்கள் பளிச் சென்று புரிந்துகொள்ள கூடாது என்ற நோக்கத் துடன்தான் மதவெறி நிகழ்ச்சிநிரல்களுடன் திசைதிருப்புகிறது. அதை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவு எடுத்திருக்கிறது. அந்தப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள் வோம்.

;