headlines

img

உண்டு, ஆனால் இல்லை

 காலாண்டு விடுமுறை உண்டா, இல்லையா என்கிற சந்தேகம் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு, அமைச்சரின் பேட்டி ஆகியவற்றால் குழப்பம் தீர்ந்தபாடில்லை. மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொ துத்தேர்வு முறையை திணிக்கிறது.  ஆனால் எள் என்றால் எண்ணெய்யாக தமிழக அதிமுக அரசு அவற்றுக்கு செயல்வடி வம் கொடுப்பதற்கு துடிக்கிறது. அதனால் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமி ருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதையடுத்து தற்போது மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்விலி ருந்து மூன்றாண்டு காலம் விதிவிலக்கு கோரப் பட்டுள்ளது என்றும் மாணவர்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.  விதிவிலக்கு கோரப்பட்டுள்ளது என்றால், இந்தாண்டு பொதுத்தேர்வு உண்டா? இல்லை யா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏனெனில் விதிவிலக்கு பெற்று விட்டார்களா? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். பெற்றி ருந்தால் விதி விலக்கு பெற்றிருக்கிறோம். அத னால், மூன்றாண்டுகளுக்கு தேர்வு இல்லை என்று தெளிவாக சொல்லியிருப்பார் அமைச்சர். உள்ளத்தில் உள்ளதுதானே வார்த்தையில் வெளி வரும். உள்ளத்தில் தெளிவு இல்லையெனில் அதுதானே வெளிப்படும். இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் போதே காலாண்டு தேர்வு விடுமுறைக் காலத்தில் பள்ளிகளில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழாக்கள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள் ளது. இதனால் காலாண்டு விடுமுறை உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பரவலான எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில், விடுமுறை உண்டு. ஆனால் மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ள நிகழ்வு களில் விருப்பமுள்ள மாணவர்கள் தானாக முன்வந்து கலந்து கொள்ளலாம். யாருக்கும் கட்டாயம் அல்ல. மாநில திட்ட இயக்ககத்தின் அறிக்கைக்கும் காலாண்டு விடுமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கூறியுள்ளார். இதன் பொருள் என்ன?  இந்நிலையில்தான் காலாண்டு தேர்வு விடு முறை குறித்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி யுள்ளார். இதனுடன் நிகழ்வுகள் நடத்தப்பட்டு தொகுப்பு அறிக்கையாக மாநில திட்ட இயக்க கத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற அதன் சுற்றறிக்கை பற்றி வேறு ஏதாவது விளக்கம் தருவார்களோ?

;