headlines

img

கண்ணீராகும் தண்ணீர்...!

தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை ஆங்காங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஆனால் வழக்கம் போல் தமிழகஅரசு மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என அறிவுரை வழங்கியிருக்கிறது. சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால்தண்ணீர் சேமிப்பை பற்றி எந்த கவலையுமேகொள்ளாத ஓர் அரசு, தண்ணீர் பற்றாக்குறைக்கானமுழுப்பொறுப்பையும் மக்கள் மீது சுமத்துவதுஎப்படி சரியாக இருக்க முடியும்?நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள தாதுஉப்புக்களின் கூட்டுத்தொகை அதிகபட்சம் 100மி.கி முதல் 500மி.கி வரை இருக்கலாம். ஆனால்தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தண்ணீரில்1500 மி.கி வரை தாது உப்புக்கள் இருக்கின்றன. இதுபோன்ற நீரை ஆய்வுசெய்து சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்காகவே தண்ணீர் பரிசோதனைமையங்கள் இயங்கி வந்தன. ஆனால் இந்தமையங்களையும் மோடி அரசு நிதி வழங்காமல்மூடி விட்டது. தற்போது எவ்வித பரிசோதனைக்கும்உட்படுத்தப்படாமலே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது எவ்வளவு பெரிய துரோகம், அநீதி.

உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளில் குடிநீர் தரம் பற்றி மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவுக்கு 120 வது இடம்தான் கிடைத்திருக்கிறது. அவ்வளவு சுகாதாரமற்ற குடிநீரையே நாம் பருகிவருகிறோம். அதே போல் நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. அமெரிக்காவை விட இது 2மடங்கு அதிகமாகும். அதாவது இந்தியாவில் ஆண்டுதோறும் 250 கன கி.மீட்டர் நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்ன? பன்னாட்டு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருநாளைக்கு 2.4 லட்சம் லிட்டர் மட்டுமே நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தலாம்.ஆனால் தற்போது15 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக எடுத்து பயன்படுத்துகின்றன. தண்ணீர் மாஃபியாக்கள் ஒருநாளைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீரை உறிஞ்சிவிற்று வருகின்றன.இவற்றை தடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்கவேண்டிய மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட்களின் கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. முட்டை, பனியன், கார்கள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி பொருட்களின் மூலப்பொருட்கள் முதல்உற்பத்தி நிறைவு பெறும் வரை பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரை நாம் கணக்கில் கொள்வதில்லை. இதனை மறைநீர் என்கின்றனர். 60 கிராம் எடையளவு கொண்ட ஒரு முட்டை உற்பத்திக்கு 196 லிட்டரும்,ஒரு பனியன் உற்பத்திக்கு 2495 லிட்டரும், 1.1 டன்எடை கொண்ட கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர்தண்ணீரும் பயன்படுகிறது. இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது இங்கிருந்து எவ்வளவு கன மீட்டர் நீரை ஏற்றுமதி செய்கிறோம் என்பதைபற்றி நம் அரசுகள் கவலை கொள்வதில்லை.

பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகள் அதிகம் தண்ணீர் செலவுசெய்து உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை இறக்குமதி மட்டுமே செய்கின்றன. ஆனால் நம் நாட்டு அரசுகள் கிடைக்கும் கொஞ்ச நஞ்சகுடிநீரையும் சேர்த்து தனியாரிடம் கொடுத்து எப்படி பணம் பார்ப்பது என்பதில் மட்டுமே குறியாகஇருக்கின்றன. இப்படியே சென்றால் தண்ணீரும் இனி கண்ணீராகவே மாறும்.

;