headlines

img

கொரோனா அரசியல்

சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் புதுவகை கொரோனா வைரஸ் தற்போது ஆசியக் கண்டத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதை உணர்ந்துள்ள மக்கள் சீனம், இந்த வைரஸ் பாதிப்பு உருவான உகான் நகரத்தை முற்றாக சீல் வைத்துள்ளது. நியூயார்க்கை விட பெரிய நகரம் இது. அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத் தப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 4494 பேரையும் பாதுகாத்திட விரிவான ஏற்பாடுகளை செய்திருப்பது மட்டுமல்ல, வெறும் 9 நாட்களில் சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகல் என்று பாராமல் 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையையே கட்டிவிட்டது சீனா. 

வழக்கமான சளி, இருமலில் துவங்கும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆங்கில மருத்துவ உலகில் மருந்து இல்லை என்று தகவல் கள் பரவியுள்ளன. அதே வேளை இந்திய மருந்து களான அமிர்தவல்லியும், துளசியும் இதற்கு பயன் படும் என்று பல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.  இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கொரோனா வைரசை முன்வைத்து ஒரு அரசிய லும் கட்டமைக்கப்படுகிறது. அது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிடுகிற ஒரு சூழ்ச்சி அரசியல். கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் துவங்கியது என்றவுடன், சீனாவே ஒரு தீண்டத் தகாத நாடு என்ற அளவிற்கு அமெரிக்காவும் அதன் ஆதரவு ஊடகங்களும் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. சீனா, வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்துகிறது என்றும், கொடுமைப்படுத்துகிறது என்றும் அந்நாட்டிற்கு பல முனைகளில் தடை விதிக்க வேண்டுமென்றும் அமெரிக்கா கூப்பாடு போட்டு வருகிறது. ஆனால் உண்மையில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை பாதுகாக்கும் விதமாகவும், மற்ற வர்களுக்கு அது பரவாமல் தடுக்கும் விதமாகவும், மிகப் பெரிய மருத்துவ வளையத்தையே உரு வாக்கி, நாடு முழுவதும் முழுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கி றது சீனா என்ற உண்மையை ஊடகங்கள் சொல்ல மறுக்கின்றன. 

உயிர் குடிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பி லும் கூட பெரும் எண்ணிக்கையில் மரணம் ஏற்படாமல் தவிர்த்திருக்கிறது சீனா. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கொரோனா வைரசே இல்லாமல் சாதாரண சளி, காய்ச்சலால் பாதிக் கப்பட்டு முறையான சிகிச்சை கிடைக்கப் பெறா மல் அது இன்புளுயன்சாவாக முற்றி 30 ஆயிரம் பேர் அமெரிக்காவில் மரணமடைந்து கொண்டி ருக்கிறார்கள் என்ற உண்மையை எங்கே போய்ச் சொல்வது? 

1996ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 67 விதமான பெரும் நோய்கள் பரவியுள்ளன. ஒவ்வொன்றையும் மருத்துவ விஞ்ஞானம் கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால் அதேவேளை ஒவ்வொன்றின் பின்னாலும் பெரும் கார்ப்ப ரேட் மருத்துவ வணிகமும் அரங்கேறி வருகிறது. இப்போது இந்த நோயை மக்கள் சீனம் கட்டுப்படுத்துவதற்கான முழு வீச்சில் இறங்கியிருப்பதைத்தான் அமெரிக்காவாலும் பெரும் கார்ப்பரேட்டுகளாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

;