headlines

img

கூட்டு களவாணிகள்... (மோடியின் திட்டமான கிசான் மோசடி)

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதைக் கண்டறிந்துதான் சிபிசிஐடி விசாரணைக்குஅரசு உத்தரவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  முறைகேட்டுக்குக் காரணமே, கடந்த ஆண்டு இறுதியில் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்யும் முறையை மத்திய அரசுஅறிவித்ததுதான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  

ஆனால் இந்த திட்டத்திற்கான சரியான பயனாளிகளை உறுதிப்படுத்தவேண்டியது மாநில அரசு தான் என்றும் அதில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டதால்தான் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்  மத்திய அரசுஅதிகாரி கூறுகிறார். இருவரின் கருத்துக்களும்முரண்பாடாக இருந்தாலும் முறைகேடு நடைபெற்றுள்ளதை இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.  இந்த திட்டம், ஐந்து ஏக்கருக்குக் கீழ் நிலமுள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே பொருந்தும். வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் வரைஇத்திட்டத்தில் 39 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இத்திட்டத்தில் சேர, ஒருவர் சிறு - குறுவிவசாயி என்பதற்கான சான்றிதழ் அவசியம். 
கடந்த மே மாதம் முதல்  ஜூலை மாதம் வரைமட்டும் 13 மாவட்டங்களில் சுமார் ஆறு லட்சம்பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர்உண்மையான பயனாளிகள் இல்லை என ஆதாரத்துடன் விவசாயிகள் சங்கத்தினர் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காரணம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் இரு கட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து தவறான பயனாளிகளை இந்தத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். 

மேலும் விவசாயிகள் தாங்களாகவே, இத்திட்டத்தில்  தங்களது பெயர்களைப் பதிவுசெய்துகொள்ளலாம், ஆனால் அந்த நபர் தகுதியானவர்தானா, கொடுத்துள்ள விபரங்கள் சரியானதா என்பதைஇறுதிப்படுத்தும் பொறுப்பு வேளாண் இணை இயக்குநருடையது. ஒவ்வொரு இணைஇயக்குநருக்கும் இதற்கென்று தனித்தனியாக பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தபாஸ்வேர்டு தனியார் இணைய மையங்களுக்குஎப்படிக் கிடைத்தது?  தற்காலிக ஊழியர்களைபணியிலிருந்து நீக்குவதன் மூலம் இந்த ஊழல்முறைகேட்டை மறைக்கமுடியாது. 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்து வாக்காளர்களைக் கவர தவறான பயனாளிகளை இத் திட்டத்தில் சேர்த்த ஆளும் கட்சியினர்,  புரோக்கர்கள் மற்றும் அவர்களுக்குத் துணைபோன அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். அதே நேரத்தில்  உண்மையான பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் பலன் சென்று சேருவதை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தவேண்டும், விவசாயிகள் சம்மந்தப்பட்ட திட்டமாக இருப்பதால் விவசாயிகள் பிரதிநிதிகளையும் கலந்து ஆலோசித்துசெயல்படுத்தும் போது இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கமுடியும். மேலும் உண்மையான பயனாளிகளையும் எளிதாக அடையாளம் காணவும் அத்தகைய நடவடிக்கை உதவும்.

;