headlines

img

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிடுக!

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறது. 
 

சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்பவர் தன்னு டைய மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்திற்குள் உள்ள முக்குறுணி கணபதி கோவிலுக்கு அர்ச்சனை செய்ய சென்றுள்ளார். அங்கு அர்ச்சகராக பணிபுரியும் தர்ஷன் என்ற தீட்சிதர் முறையாக பூஜை செய்யாமல் பூஜை தட்டை லதாவிடம் கொடுத்துள்ளார். ஏன் முறையாக அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்டதற்காக அவரை கன்னத்தில் அறைந்துள்ளார் தர்ஷன்.

இதுகுறித்து கேட்டதற்கு அவமரியாதையாக பேசியதோடு வேண்டுமானால் நீயே கோவி லுக்குள் சென்று அர்ச்சனை  செய்து கொள்ள வேண்டியதுதானே என்றும் திட்டியுள்ளார். 

லதா அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. ‘வழக்கம்போல’ தலைமறை வாகிவிட்டார்.  தர்ஷன் திமிராகப் பேசுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண்ணை கோவிலில் வைத்து அடித்தது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய செயினை அறுக்க முயன்றதாகவும், தீட்சிதர் பொய் பேசி யுள்ளார். 

சிதம்பரம் கோவிலில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப்பாடல்களை பாட முயன்ற பெரி யவர் ஆறுமுகசாமி பலமுறை தாக்கப்பட்டுள் ளார். அண்மையில் விதிகளுக்கு மாறாக சிதம்பரம் கோவிலை திருமண மண்டபமாக்கி தீட்சிதர்கள் வசூலில் ஈடுபட்ட தகவலும் வெளியானது. 

சிதம்பரம் கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறிக் கொண்டு தீட்சிதர் கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லை.  அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் முழுமை பெறாமலே உள்ளது. எந்தவொரு பணிக்கும் அவரது பிறப்பு மட்டுமே தகுதி என்று கூறுவது அரசியல் சாசனத்தையே அவமதிப்பது ஆகும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதி யினரையும் அர்ச்சகராக மாற்றுவதில் என்ன  தடை? இன்னும் சொல்லப்போனால் பெண்களை யும், அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி. 

இந்துக்களின் பாதுகாவலர் போல வேட மிடுகிற எச்.ராஜா, நாராயணன், ராகவன் போன்ற வர்கள் ஒரு இந்துக் கோவிலில் வழிபடச்சென்ற ஒரு இந்துப் பெண் தாக்கப்பட்டது குறித்து இது வரை வாய் திறக்காதது ஏன்? அங்கு தான் இருக்கி றது சூட்சுமம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது முழு அர்த்தம் பெற வேண்டுமானால் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அனைத்து சாதியின ரையும் பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். சிதம்பரம் கோவிலில் நடை பெறும் அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். அந்தக் கோவில் தீட்சிதர்களின் சொந்தசொத்து என்ற நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும். 

;