headlines

img

தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் விரோதமானது மத்திய அரசு....

மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்தியபோது  ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயனடைந்தனர். தகுதி என்ற போர்வையில் மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை மத்திய அரசு புகுத்தியபோதே இம் மாணவர்களின் மருத்துவக் கனவுசிதைந்துவிட்டது.  இதனால் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். 

தமிழகத்தில்  2019-20 ஆம் ஆண்டில் நீட் தேர்வுஎழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 2557 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், நடப்பாண்டில் இது 1615 ஆகக் குறைந்து விட்டது.  இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்குப் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நீட்தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகத்  தமிழக அரசு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடுவழங்கி சட்டமியற்றியது. இதேபோன்று புதுச்சேரி அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசுக்குஅனுப்பி வைத்தார். இந்நிலையில் 10 சதமான இட ஒதுக்கீட்டைப்புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு
மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தபோதுதான் மத்திய அரசின் துரோகம் அம்பலமானது. அந்தவழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த  பதில் மனுவில், மருத்துவக் கல்வியில், “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுவழங்குவது சட்ட விரோதம் எனவும், இதனால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்றும்  கூறியுள்ளது.  “இத்தகைய இட ஒதுக்கீடு, நீட் தேர்வு அடிப்படைக்கே விரோதமானது என்பதால் இந்த இட ஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம்’’ எனவும் மத்திய பாஜக அரசு  கூறியுள்ளது. 

தமிழகத்திலும் நீட் தேர்வு அமலாகியுள்ள நிலையில் தமிழக அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களைப் பாதுகாக்க அனைத்து கட்சிகளின் ஆதரவோடு 7.5 சதமான இட ஒதுக்கீடு சட்டத்தைநிறைவேற்றி அமலாக்கி வருகிறது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்  புதுச்சேரி வழக்கில் மேற்கொண்ட அதே அணுகுமுறையைமத்தியஅரசு  இவ்வழகிலும் மேற்கொண்டால்தமிழக அரசு நிறைவேற்றிய 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பறிபோகும். மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையைத் தட்டிப்பறிக்கும்  மத்திய பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை  அனுமதிக்கக்கூடாது. சமூகநீதிக்கு விடப்பட்ட பகிரங்க சவாலாக இதனை எடுத்துக்கொள்ளவேண்டும். 

எல்லா வகையிலும் தமிழர் விரோத அரசுஎன்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும்மத்திய பாஜக அரசுக்கும் பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அதிமுகவுக்கும் சட்டப்பேரவைத்தேர்தலில்  தமிழக, புதுச்சேரி வாக்காளர்கள்தக்க பாடம் புகட்டவேண்டும். சமூக நீதி காக்க வேண்டும்.

;