headlines

img

சிந்திக்க மறுக்கும் மூளையும் சீரழிவுச் சிந்தனைகளும்

பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் குரு பீடத்தின் மூளை முழுவதும் பிற்போக்கு கருத்துக் கள் நிரம்பி வழிகின்றன என்பதை அதன் தற்போ தைய தலைவராக உள்ள மோகன் பகவத்தின் பேச்சுகளே உணர்த்துகின்றன. நவீன விஞ்ஞான, சமூக கருத்துக்களுக்கு மாறாக பெண்களை அடி மைத் தளையில் இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கருத்தோட்டம்.  சிறுவயது திருமணத்தை வலியுறுத்தும் அவர்கள், விதவைகள் மறுமணம், சாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை ஏற்பதில்லை. பெண்கள் பணிக்குச் செல்வதையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பெண்கள் அடுப்பங்கரைக்குள்ளேயே விறகோடு விறகாக வெந்து மடிய வேண்டும் என்பதே அவர்களது விருப்பம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்கிறார். பெண்கள் வெளியே வேலைக்குச் செல்லக் கூடாது, ஆண்கள்தான் செல்ல வேண்டும். பெண் கள் வீட்டிலிருந்து குடும்பப் பணியை மட்டும் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்களால் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியினால் இந்திய மக்கள் அனைவரது வாழ்க்கையும் பெரும் நெருக்கடியில் உள்ளது. ஆண், பெண் இருவர் சம்பாதித்தால் கூட குடும் பத்தை நடத்த முடியாத நிலை. இந்த நிலையில் ஆண் மட்டும் சம்பாதித்தால் போதும் என்று திண்ணை வேதாந்தம் பேசுகிறார் இவர். மேலும் இன்று பெண்கள் இல்லாத, வெல்லாத துறையே இல்லை. ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் குறித்த நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், மோகன் பகவத் போன்றவர்கள் நச்சுக் கருத்துக்களை நாள்தோறும் பரப்பி வருகின்றனர். பெண்கள் வேலைக்குப் போவதை மட்டு மல்ல, படிப்பதும் கூட இவருக்கு எட்டிக்காயாய் கசக்கிறது. தற்போது விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. படிப்புடன் பணமும் சேரும் போது குடும்பங்கள் பிரிந்து போகின்றன என்று கவலைப் பட்டிருக்கிறார் பகவத்.  “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் அடிமைகளாகவே வாழ வேண்டும். படிப்பு இருந்தால் அவர்கள் சுய மாகச் சிந்தித்து விடுவார்கள். இதுதான் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு பிரச்சனை. எனவேதான் பெண்கள் படிக்காமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று உபதேசிக்கிறார்.  இவரைப் போன்றவர்கள் பத்து நூற்றாண்டு களுக்கு முந்தைய மூளையுடன் சிந்திப்பவர் கள். உலகத்தின் போக்கை, வளர்ச்சியை உண ராதவர்கள். இதுவொரு தனிமனித அழுக்காக மட்டுமில்லை. இந்த ஆர்எஸ்எஸ் சொல்வதைத் தான் பாஜக நாட்டிலே சட்டமாக்கிக் கொண்டி ருக்கிறது. இப்படியே போனால் பெண்கள் படிப்ப தையும், பணிக்குச் செல்வதையும் கூட காலப் போக்கில் சட்டம் போட்டு தடுப்பார்கள். காலச் சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்ற முயலும் இவர் போன்றவர்களை சமகாலச் சமூகம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

;