headlines

img

மடைமாறிய நிதியை மீட்டுத் தருக!

பட்டியல் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப் பட்ட பணத்தை வேறு துறைகளுக்கு பயன்படுத்தி யது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட வகையில், ரூ.265 கோடியை பழங்குடியின மக்கள் இழந்தி ருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் பதி லளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

‘‘தமிழ்நாடு அரசு-ஒன்றிய அரசு இணைந்து  2018-2019, 2019 -2020, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவ தற்காக ரூ.1,310 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.

இதில், ரூ.265 கோடி பழங்குடியின மக்களுக்கு செலவிடப்படவில்லை. மாறாக, இதில் இருந்து எடுத்து 2019-2020-ஆம் நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.10 கோடி, 2020-2021-ஆம்  நிதியாண்டில் வனத் துறைக்கு ரூ. 67.77 கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு ரூ.58.17 கோடி என மொத்தம் ரூ.129.9 கோடி பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள் ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பழங்குடியின மக்களின் அடிப்ப டைத் தேவைகளான நில உரிமை பட்டா, குடி யிருப்பு வீடுகள், மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முழுமை யாக நடைபெறாமல் இருக்கும் நிலையில், அவர்க ளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை திருப்பி அனுப்புவதும் பிற துறைகளுக்கு மடைமாற்றம் செய்யவும் ஏற்கத்தக்கதல்ல.

2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய நிதி ஆண்டு களில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கிட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்கும்.

இந்த நிதி மடைமாற்றம் செய்யப்பட்ட கால கட்டம், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்த கால மாகும். அதிமுக ஆட்சிக் காலத்தில்  எந்தெந்த துறைகளில் முறைகேடுகள், ஊழல்கள், நிதி மடை மாற்றங்கள், முறையான கணக்குகள் இல்லாத நிலைமை உட்பட அடுத்தடுத்து வெளியான  தணிக்கை அறிக்கைகளும் அம்பலப்படுத்தி யுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே பழங்குடி மக்களுக்கான நிதி மடைமாற்றம் செய்யப்பட்ட விவரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீப நாட்களாக அதிமுக தரப்பிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக அரசு மீது விதவிதமான குற்றச் சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பத்தாண்டு காலம் அதிமுகவிடம்தான் அதிகாரம் இருந்தது என்பதை மறந்து அவர் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக ளால் சீர்குலைந்து நிற்கும் தமிழக பொருளாதாரம் உட்பட அனைத்தையும் சீர்செய்ய வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. பழங்குடி மக்கள் நலன் காப்பதிலும் அரசு பொருத்தமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

;