headlines

img

ஒமிக்ரான் பரவலும், உடனடி கவனமும்

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதனன்று தெரிவித்திருந்த நிலை யில், இந்தியாவின் முதன் முறையாக கர்நாடகத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பின் கொடும் விளைவுகளி லிருந்து இந்தியா முழுமையாக மீளாத நிலை யில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது. 

டிசம்பர் 15இல் துவங்கயிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்தை ஒத்திவைக்கப் போவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக வும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுமட்டுமே போதுமானதாக இருக்காது. 

ஒமிக்ரான் என பெயரிடப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்கா வில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 25க்கும் அதிகமான நாடுகளில் பரவி யுள்ளது. பிற வைரஸ்களுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் அதி வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

ஒமிக்ரான் வைரஸ் குறித்து அறிவியலாளர்க ளிடையே இருவேறு கருத்துக்கள் உள்ளன. இந்த ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்பது ஒரு சாரார் கருத்து. ஒப்பீட்டளவில் இது அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றல்ல என சில வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற னர். உலகளவில் ஒமிக்ரான் வைரசால் இதுவரை  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. 

உலகளவில் தடுப்பூசி செலுத்துவது பெருமளவு நடந்துள்ள நிலையில், இந்த வைரஸ் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்படும்; உயிரிழப்பும் மிகக் குறைவாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் இந்த புதுவகை வைரஸ் தாக்குவதாகவும் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களும் மீண்டும் பாதிக்கப்படுவதாகவும் வெளியாகும் தகவல்கள் மிகுந்த கவனத்தோடு இந்த புதிய நோய்த் தொற்றை அணுக வேண்டியதன் அவசி யத்தை உணர்த்துகின்றன. 

இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது விரைவுபடுத்தப்படவேண்டும். இந்த புதிய வைரசை கட்டுப்படுத்த மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியிருக்கலாம் என  கூறப்படும் நிலையில் முதல் இரண்டு தவணையை அனை வருக்கும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

ஒருவேளை ஏற்கெனவே செலுத்தப்பட்ட தடுப்பூசி இந்த ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்தாது என்றால், புதிய வீரியமிக்க தடுப்பூசியை உடன டியாக கண்டுபிடிப்பது கடினமான ஒன்றல்ல என்று சில மருந்து நிறுவனங்கள் கூறுகின்றன.  இப்போதாவது பொதுத்துறை நிறுவனங்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தி அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும்.

 

;