headlines

img

இது ஆபத்தான போக்கு...

இராமநாதபுர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அந்த பொறுப்பிலிருந்துநீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தமிழக அதிமுக அரசு பாஜகவினரின் அழுத்தத்திற்கு பணிந்து நேர்மையான அதிகாரிகளை பழிவாங்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி இராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்பவர் தனிநபர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும்அக்கட்சியின் தலைவர்கள் மத கலவரத்தை தூண்டும் வகையில் இந்து பிரமுகர் ஒருவரை இஸ்லாம் தீவிரவாதிகள் படுகொலை செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.விநாயகர் சதூர்த்தி விழாவை அருண் பிரகாஷ்நடத்தியதால் தான் இந்த கொலை நடந்ததாக எச். ராஜா இட்டுக் கட்டி கூறினார்.

இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் உடனடியாக இதை மறுத்து இந்த கொலைக்கு மத பின்னணி எதுவும்கிடையாது என்றும், பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை தான் கொலைக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.மேலும் தனிநபர்கள் மோதல் தொடர்புடைய கொலையை மதத்தோடு சம்பந்தப்படுத்துவதை அவர் கடுமையாக மறுத்தார். இந்நிலையில் தவறான தகவல் பரப்பி மத மோதலை தூண்ட முயன்ற பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக உரிய நேரத்தில் தலையிட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருப்பதுமதவெறியை தூண்டுபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விடும். பாரபட்சமின்றி செயல்பட நினைக்கும் அதிகாரிகளை அச்சுறுத்துவதாக இது அமையும்.
இதுபோல மத கலவரத்தை தூண்டுவது பாஜகவினருக்கு கைவந்தகலை. 2015ஆம் ஆண்டு இராமநாதபுரம் பாஜக நிர்வாகி அஸ்வின் குமார்மற்றும் அவரது தந்தை தனிப்பட்ட பிரச்சனைகள்காரணமாக தாக்கப்பட்ட போது எச்.ராஜா இஸ்லாமியர்களை குற்றம் சாட்டினார். பள்ளிவாசல் மீது பாஜகவினர் தாக்குதல் தொடுத்தனர். அப்போது காவல்துறை உண்மையை வெளிப்படுத்தி மோதலை தடுத்தது. இப்போதும் அதே பாணியில்தான் எச்.ராஜா வகையறா பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தென்காசி துவங்கிகோவை, திருப்பூர் வரை இதேபாணியில்தான் பாஜக செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாக தமிழக பாஜகவில் பிரபல ரவுடிகள் திட்டமிட்டு பெரும் எண்ணிக்கையில்  சேர்க்கப்பட்டு வருகின்றனர். விநாயகர் சதூர்த்தியின் போது காவல்துறையினரை எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் பகிரங்கமாக மிரட்டினர்.தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி பெரும் வன்முறைக்கு பாஜகவினர் தயாராவது போல தெரிகிறது. இந்நிலையில் காவல்துறை பாரபட்சமின்றி நேர்மையாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பாஜகவினரின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியக்கூடாது.

;