headlines

img

தவிர்க்க வேண்டியது வார்த்தை மட்டுமல்ல!

இந்திய நாட்டை இந்து மதத்தின் அடிப்ப டையிலான இந்து ராஷ்டிரமாக மாற்றுவதையே கொள்கை எனக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத் வியாழனன்று ராஞ்சியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, தேசியவாதம் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம் தேசியவா தம் என்ற சொல்லை சிலர் நாஜிசம் மற்றும் பாசிசத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது பணியாளர் ஒருவர் என்னிடம் இங்கிலாந்தில் தேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி அந்நாட்டின் தேசியவாதம் என்ற சொல் ஹிட்லர், நாஜிசம், பாசிசம் ஆகிய வற்றை குறிப்பதாக தெரிவித்தார். எனவே தேசிய வாதம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்தச் சொல் ஹிட்லரின் நாஜி கொள்கையை மக்களிடையே நினைவு படுத்துகிறது என்று பகவத் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்காரர்கள் மட்டுமின்றி அதன் பரிவார அமைப்புகளும் தவிர்க்க வேண்டியது தேசியவாதம் என்ற சொல் மட்டுமல்ல, அந்த சொல் குறிக்கும் செயல்பாடுகளையும் நட வடிக்கைகளையும் சேர்த்துத்தான். அப்போது தான் நாட்டில் தற்போது நிலவுகிற மதரீதியிலான பதற்ற நிலை தணிந்திட வாய்ப்பு ஏற்படும். அந்தக்கூட்டத்தில் பேசிய பகவத்,இந்தியாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஹிந்து மதத்தை சேர்ந்த வரே. ஏனெனில் இந்திய கலாச்சாரம் ஹிந்து கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய கலாச்சாரம் ஹிந்து கலாச்சாரத்தின் விழுமி யங்கள் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டங்களிலும் அதன் பரிவாரங்களின் கூட்டங்களிலும் இந்தியரை இந்துக்கள் என்றே மதரீதியாகவே உணர்த்தப்படுகிறது; உரைக்கப்படுகிறது; மக்களி டையே பரப்பப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் குருகுலங்களில் இவ்வாறுதான் மாண வர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அதன் விளைவுதான் இன்றைய, இத்தகைய மதவெறி கண்ணோட்டத்திலான கொடூர நடவடிக்கைகள்.

இந்தியாவில் அரசு கல்விக் கூடங்களில்  மாணவர்கள், நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்த வர்கள் என்றே உறுதிமொழி ஏற்று சகோதரத்து வத்தை வளர்ப்பதற்காக பயிற்றுவிக்கப்படுகி றார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் நடைமுறையோ  இதற்கு நேர் எதிராக அமைந்திருக்கிறது.  அதனால் வெறும் வார்த்தைகளை தவிர்ப்பது மட்டுமல்ல, அது உணர்த்தும், குறிக்கும் சிந்தனையையும், சித்தாந்தத்தையும்  தவிர்த்தால் மட்டுமே நாட்டு மக்கள் இவர்களை நம்புதற்குரியவர்க ளாக எண்ணுவார்கள். ஏனெனில் இந்தியா என்பது பல்வேறு மத, இன, மொழி, கலாச்சாரங்களை கடைப்பிடிக்கும் மக்களை கொண்ட துணைக் கண்டமாக திகழ்கிறது. அதை இந்து மத நாடாக மாற்ற முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

;