headlines

img

பீகார் தேர்தலுக்காக இன்னும் என்னென்னவோ?

பீகார் சட்டப்பேரவைத்தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் விரோதநிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள்- பாஜக கூட்டணி அரசு தூக்கியெறிப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்ற பாஜக- ஐக்கிய ஜனதாதளம் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால்இருகட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற எதை எதையோ கையாள்கின்றன.

பீகாரை சேர்ந்தவர் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத். இவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம்  மக்களிடையே நன்குஅறிமுகமானார்.  சமீபத்தில் இவரது தற்கொலைசம்பவம் பாலிவுட் திரைவுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேராதவர்கள் இந்தி திரை உலகில் ஆதிக்கம் செலுத்தமுடியாது என்றும் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பீகார் மாநிலத்தை சேர்ந்த சுஷாந்த்தைமராட்டிய மாநிலத்தவர்கள் கொன்று விட்டார்கள்என்று பீகார் மாநிலத்தில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் பிரச்சாரம் செய்தன.

பீகாரில் கடந்த 15 ஆண்டுகால நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியில் மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்குகேட்க  எந்த ஒரு உருப்படியான திட்டங்களும் இல்லாத நிலையில் இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களை அக்கட்சிகள் வேண்டுமென்றே பெரிதுபடுத்தின. தற்போது இக்கட்சிகளின் தலைவர்கள் வாயில் மன்னை அள்ளிப்போட்டுள்ளது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் குழுவின் அறிக்கை. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம்,தற்கொலையால் ஏற்பட்டதுதான் என அம்மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துவிட்டது. தூக்கிலிடப்பட்டதால் ஏற்பட்ட காயத்தைத் தவிர உடம்பில் வேறெந்தகாயங்களும் இல்லை என்று  தடயவியல் குழுவின்தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்துவருகிறது. எனவே தனது இந்த அறிக்கையை சிபிஐயிடம் தடயவியல் குழு வழங்கியுள்ளது. மும்பை தடயவியல் ஆய்வகத்திலும், எய்ம்ஸின்நச்சுயியல் ஆய்வகத்திலும் எந்த ஒரு போதைப்பொருளும் கண்டறியப்படவில்லை என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.  

இதனால் பாஜக-ஐக்கிய ஜனதாதளகூட்டணி மக்கள் முன்பு அம்பலப்பட்டுள்ளது. பாஜகவுக்கு   முட்டுக்கொடுக்கும் வகையில்சுஷாந்த்சிங் பிரச்சனையை பெரிதுபடுத்திமத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்பியசில தேசிய ஊடகங்களுக்கும் தடயவியல் குழுவின்அறிக்கை பலத்த அடியாக அமைந்துள்ளது.சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் மக்களவைத்தேர்தலாக இருந்தாலும் உண்மையான பிரச்சனைகள் முன்னுக்கு வருவதை தடுக்கும் நோக்கத்தில் திசைதிருப்பும் வகையில்செயல்படும் பாஜகவின் முயற்சியும் தோற்றுப்போயுள்ளது.
 

;