கொரோனா பெருந்தொற்று பீடித்து உயிரி ழப்பவர்களைக் காட்டிலும் வேலையில்லாமல் பசி பட்டினியால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதி கரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கார ணம் தற்போதைய உலக நிலைமை இப்படித் தான் உள்ளது. கொரோனா தொற்று பரவக் கூடாது என்று இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி விட்டன. இதனால் சிறு,குறு தொழில்கள், ஜவுளி ஆலைகள் முடங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் தவிர மற்ற ஆலைகள் இயங்கவில்லை. சிறிய பெரிய கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் 30 நாட்களாக குறைக்கப்பட்டு விட்டதால் அதை நம்பியிருந்த ஊரகப்பகுதி விவசாயத் தொழி லாளர்கள் துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண் டிய மத்திய மாநில அரசுகள் எந்தெந்த வழிக ளில் வரிகளைப் போட்டு மக்களை கசக்கி பிழிய லாம் என்று யோசித்துக்கொண்டிருக்கின்றன.
இந்திய உணவு கழக கிடங்குகளில் தானி யங்கள் அழுகிப்போனாலும் பரவாயில்லை; ஏழை மக்களுக்கு விநியோகம் செய்ய மாட்டோம் என்ப தில் மோடி அரசு விடாப்பிடியாக உள்ளது. இப்படியே நாட்கள் கடந்தால் மக்கள் பசி, பட்டினியால் வாடும் நெருக்கடி நிலை உருவாகக்கூடும்; அதனைத் தடுக்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்று ஐநா உலக உணவுத்திட்ட செயல் இயக்குநர் டேவிட்பிஸ்லீ எச்சரித்துள்ளார்.
சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர், ஆப்பிரிக்காவில் விவசாய நிலத்தைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள், அடிக்கடி நிகழும் இயற்கை பேரழிவு, பொருளா தார நெருக்கடி போன்றவற்றின் காரணமாக அவ்வாறான நிலை ஏற்படும் என்று ஐ.நா சபை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 82 கோடியே 10லட்சம் பேர் ஒவ்வோர் நாளும் பசி யோடு உறங்கச் செல்கிறார்கள். நிலைமை மோச மடையும்போது மேலும் 13 கோடியே 50லட்சம் பேர் அந்த பட்டியலில் இணைவர்கள்.
இந்நிலையில், கிருமித்தொற்று நெருக்கடி யால் 2020ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், இன்னும் கூடுதலான மக்கள் பசியின் விளம்பிற் குத் தள்ளப்படுவார்கள் என்கிறது உலக உணவுத் திட்டத்தின் புதிய ஆய்வு. ஒவ்வோர் நாளும் 10 கோடிப்பேருக்கு ஐநா உலக உணவுத் திட்டத்தால் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 3 கோடிப்பேர் உணவுக்காக இந்த திட்டத்தை மட்டுமே சார்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு கிடைக்க வில்லையென்றால் மூன்று மாத இடை வெளியில் சுமார் 3லட்சம் பேர் பசியால் இறக்கக் கூடும். எனவே கிடங்குகளில் உபரியாக உள்ள உணவுத்தானியங்களை இலவசமாக மக்களுக்கு விநியோகிப்பது, ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பை பெருக்குவது, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு வட்டிச்சலுகை, விவசாயிகளு க்கு மானியம், 100 நாள் வேலை திட்ட நாட்களை அதிகரித்தல் போன்றவற்றால் மட்டுமே மக்களை பட்டினிச்சாவில் இருந்து தடுக்கமுடியும்.