headlines

img

ஆள் மாறினால் போதாது

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் பிரத மர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை யடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். இது எந்தளவுக்கு அரசியல் நெருக்கடியைத் தீர்க்கும் என்று தெரியவில்லை.  

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் எல்.டி.டி.இ.க்கு எதிரான நடவடிக்கையின் போது இலங்கை ராணுவம் பலப்படுத்தப்பட்டது. அப்போது ஜனாதி பதியாக இருந்த மகிந்த ராஜபக்சே கோடிக்க ணக்கான ரூபாயை ராணுவத்திற்கு ஒதுக்கி வெளிநாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங் களை வாங்கி குவித்தார். அப்போதிருந்து இலங்கை பொருளாதாரத்திற்குச் சிக்கல் தொடங்கியது. 

எல்டிடிஇ தோற்கடிக்கப்பட்ட பின்னர்  கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் 13வது சட்டத்திருத்தம் அமல் படுத்தப்படவில்லை. இலங்கையில் சிறு பான்மை மக்களாக உள்ள தமிழர்களும் இஸ்லா மியர்களும் எந்தவித அச்சமும் இல்லாமல் வாழ்வதை உறுதிப்படுத்தினால் மட்டுமே அந்நாட்டின்  மீது சர்வதேச அளவில் நம்பிக்கை ஏற்பட்டு முதலீடுகளைப் பெறமுடியும். ஆனால் ரணிலும் மோசமான பொருளாதாரக் கொள் கைகளை கடைப்பிடித்ததால் அதிகாரத்தை இழந்தவர்தான். 

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரம சிங்கேயும் மக்களின் நம்பிக்கையை இழந்த கோத்தபய ராஜபக்சேவும் இணைந்து அரசாங் கத்தை அமைப்பதன் மூலம் தற்போதைய நெருக் கடிக்குத் தீர்வு கிடைக்காது என்றே இலங்கை மக்கள் கருதுகிறார்கள். 

அம்பாந்தோட்டை துறைமுகம் உள்பட பொ துச் சொத்துக்களை விற்பனை செய்வதிலும் இவர்கள் இருவருக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை. அதிகாரத்தில் இல்லாதபோது ஒரு வரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்ட வர்கள் இன்று பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைந்து செயல்படப்போவதாகக்   கூறு வதை இலங்கை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.

மனித உரிமை மீறல், பொதுச் சொத்தை அபக ரித்தல்,  பொருளாதாரத்தைச் சீரழித்தது ஆகிய காரணங்களால் இன்று பதுங்கு குழிக்குள் தங்க வேண்டிய நிலைக்கு  ராஜபக்சேவும் அவரது குடும்பமும் தள்ளப்பட்டுள்ளது. அந்த ராஜ பக்சேக்களின் மீட்பராக ரணில் விக்கிரமசிங்கே களம் இறங்கியுள்ளதாகவே இலங்கை மக்கள் சந்தேகிக்கிறார்கள்.  

எனவேதான் ராஜபக்சே குடும்பம் அதிகா ரத்திலிருந்து முற்றிலும் விலகும் வரை போராட்டம் தொடரும் என்று வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்கள் அமைப்பு கள் அறிவித்துள்ளன. 

மாற்றுப் பொருளாதாரக் கொள்கையுடன் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு அமையவேண்டும். அந்த அரசு விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு முடிவு கட்டவேண்டும் என்றே இலங்கை மக்கள் விரும்பு கிறார்கள்.

;